தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
விளவங்கோடு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முகமாக இருந்த விஜயதாரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு போனார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணிதான் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
2011,2016, 2021 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர் விஜயதாரணி. அவர் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ததால் 2024ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
இந்த முறை தாரகை கத்பர்ட் குளச்சல் தொகுதியில் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் களம் காண்கிறார். இவர் கேரள மாநில தேவாலய நிர்வாகி.
இவரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தான் வேட்பாளராக்கியுள்ளார்.
தவெக சார்பில் மைக்கேல்குமார், நாதக சார்பில் மரிய ஸ்டெல்லா ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி -47%
அதிமுக கூட்டணி- 35%
தவெக-13%
நாதக-4% வாக்குகள் பெறும்
விளவங்கோடு தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் வெற்றி பெறவே வாய்ப்பிருக்கிறது
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்\

