சிறுவாணி தண்ணீர் போல தூய்மையான ஆட்சி… கோவையில் விஜய்

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான ஒரு நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 27) தெரிவித்துள்ளார். vijay says tvk forms corruption free government

கோவை மாவட்டம் குரும்பாளையம் என்.எஸ்.கே பொறியியல் கல்லூரியில் தவெக பூத் கமிட்டிக் கூட்டம் நேற்றும் இன்றும் (ஏப்ரல் 26, 27) இரண்டு நாட்கள் நடைபெற்றது.

ADVERTISEMENT

இன்று நடைபெற்றக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசும்போது, “நேற்று பேசும்போது இந்த மீட்டிங் வெறும் ஓட்டுக்காக மட்டுமே நடத்தப்படும் மீட்டிங் இல்லை என்று கூறினேன். ஏனென்றால், தவெக என்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த ஒரு எல்லைக்கும் சென்று அதனை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்.

ADVERTISEMENT

நம்முடைய ஆட்சி அமைந்ததும், ஒரு சுத்தமான கவர்ன்மென்ட்டாக இருக்கும். நம்முடைய ஆட்சியில் ஊழல் இருக்காது. அதனால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், தைரியமாக நம்முடைய பூத் கமிட்டி உறுப்பினர்கள் மக்களை சென்று சந்தியுங்கள்.

‘மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய்’ என்று அண்ணா கூறியதை இங்கு உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். இதை நீங்கள் புரிந்துகொண்டு செயல்பட்டால், உங்கள் ஊர் சிறுவாணி தண்ணீர் மாதிரி அவ்வளவு சுத்தமான நம்முடைய ஆட்சி அமையும்.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான ஒரு நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும். அதனால் இதை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். பூத்திற்கு வந்து ஓட்டுப்போடும் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. தவெக என்பது மற்றுமொரு அரசியல் கட்சியல்ல, இது ஒரு விடுதலை இயக்கம்.

நாம் வெற்றி அடையவதற்கு உங்களுடைய செயல்பாடு தான் மிக மிக முக்கியம். நீங்கள் தான் முதுகெலும்பே. அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்” என்று தெரிவித்தார். vijay says tvk forms corruption free government

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share