உசிலம்பட்டி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

உசிலம்பட்டி வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

உசிலம்பட்டி.. தமிழ்நாட்டில் பார்வார்ட் பிளாக் கட்சிக்கு அடையாளம் கொடுத்துகிட்டிருந்த தொகுதி..

பார்வார்ட் பிளாக் மூத்த தலைவர் மூக்கையாதேவர் 5 முறை ஜெயிச்சாரு.. அவரது மகன் முத்துராமலிங்கம் 1984-ல் சுயேட்சையாக வெற்றி பெற்றார்.

1996-ல் வல்லரசு, 2001-ல் சந்தானம், 2011-ல் கதிரவன்னு பார்வார்ட் பிளாக் தலைவர்கள் அதிகமாக வென்ற தொகுதி.

கடந்த 2 தேர்தல்களாக அதிமுக இங்கே ஜெயிச்சுகிட்டு இருக்கு 2006-ல் வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். போன தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தார்.

1989-ல் திமுக கூட்டணியில வல்லரசு ஜெயிச்ச பிறகு ஒரு முறை கூட இங்கே திமுக வென்றதே இல்லை.. 2-வது இடத்தில்தான் இருந்திருக்கிறது..

இந்த முறை திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியிடுவது இல்லை.

49 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் இங்கே களம் காண்கிறது. காங்கிரஸ் வேட்பாளராக டி.சரவணக்குமார் போட்டியிடுகிறார். இவர் புதுமுகம்.

சசிகலா கட்சி சார்பில் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியில இருந்தார் ஐயப்பன். ஓபிஎஸ் உடன் திமுகவுக்கும் போனார்.. ஆனால் ஓபிஎஸ்-க்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்தது. ஐயப்பனுக்கு திமுகவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இப்போது சசிகலா கட்சியின் வேட்பாளராக நிற்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிராமி, திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உறவினர். இந்த தொகுதியில பலமுனைகளாக, பலமான போட்டி நிலவுகிறது.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக –44 %
அதிமுக –33%
தவெக-14 %
நாதக-8% வாக்குகள் பெறும்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? - தேனி | Theni | Minnambalam Mega Survey Results | Election 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share