யுபிஐ தொடங்கி 10 ஆண்டுகள்.. 2025-26-ல் ரூ.314 லட்சம் கோடி பரிவர்த்தனை!

Published On:

| By Mathi

UPI Completes 10 Years: Transactions Reach ₹314 Lakh Crore in FY 2025-26

நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை (UPI Transactions) தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 25) 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

2016 – 17-ம் நிதியாண்டில் வெறும் 1.78 கோடியாக இருந்த ஆண்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025 – 26-ம் நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது பரிவர்த்தனை எண்ணிக்கையில் சுமார் 13 ஆயிரம் மடங்கு அதிகமாகும்.

ADVERTISEMENT

அதேபோல் பரிவர்த்தனை மதிப்பு 2016 – 17-ம் நிதியாண்டில் ரூ.0.07 கோடியாக இருந்த நிலையில், 2025 – 26-ம் நிதியாண்டில் ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பரிவர்த்தனை மதிப்பில் 4 ஆயிரம் மடங்கிற்கும் அதிகமாகும்.

நாட்டின் மின்னணு பொது உட்கட்டமைப்பின் மிகவும் வெற்றிகரமான தூண்களில் ஒன்றாக யுபிஐ உருவெடுத்துள்ளது. இது பல்வேறு அமைப்புகளுக்கிடையே செயல்படக்கூடிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை தளத்தை அளிக்கிறது. இதன்மூலம் செயலி வழியாக தனிநபர்களிடையேயான மற்றும் தனிநபர் – வணிகர் இடையேயான பரிவர்த்தனைகளை தடையின்றி மேற்கொள்ள முடிகிறது. தற்போது லட்சக்கணக்கான பயனர்களின் விருப்பக் கட்டண முறையாக இது மாறியுள்ளது. அத்துடன் நாட்டின் பணப் பரிவர்த்தனை முறையையும் மாற்றியமைத்துள்ளது.

ADVERTISEMENT

மின்னணு இடைவெளியை குறைத்தல், நிதி சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், மின்னணு நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாடு முழுவதும் தனி நபர்களையும், சமூகங்களையும் யுபிஐ வலுப்படுத்தியுள்ளதுடன், பரவலான பொருளாதார பங்கேற்பையும் ஊக்குவித்துள்ளது.

யுபிஐ சில புள்ளி விவரங்கள்:

  • ஆண்டு பரிவர்த்தனை அளவு (2025-26): 24,162 கோடி
  • ஆண்டு பரிவர்த்தனை (2025-26): ₹314 லட்சம் கோடி
  • தினசரி சராசரி பரிவர்த்தனைகள் (2026): 66 கோடி
  • அதிகபட்ச மாதாந்திர அளவு (ஜூலை 2026): 2,366 கோடி பரிவர்த்தனைகள்
  • அதிகபட்ச மாதாந்திர பரிவர்த்தனை (ஜூலை 2026): ₹29.88 லட்சம் கோடி
  • யுபிஐ-யில் உள்ள வங்கிகள் (ஜூலை 2026 நிலவரப்படி): 741 வங்கிகள்
  • இந்தியாவின் டிஜிட்டல் கட்டணங்களில் யுபிஐ பங்கு: 84% (நிதியாண்டு 2025-26)
  • உலகளாவிய நிகழ்நேர அளவில் பங்கு: உலகளவில் 49% (2025)
  • யுபிஐ ஏற்றுக்கொள்ளும் நாடுகள்: 11 நாடுகள்
    ஐக்கிய அரபு அமீரகம்
    பிரான்ஸ்
    பூடான்
    இலங்கை
    நேபாளம்
    சிங்கப்பூர்
    மொரிஷியஸ்
    கத்தார்
    கம்போடியா
    கிரீஸ்
    மாலத்தீவுகள்
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share