சிறிய தொகையைத் தொடர்ந்து சேமித்து, குறிப்பிட்ட காலத்தில் கணிசமான தொகையை உருவாக்க விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு திட்டம் (RD) ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
தற்போது இந்தத் திட்டத்துக்கு 6.7% வட்டி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டிக்கு காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி கணக்கிடப்படுகிறது.
மாதம் ரூ.9,500 முதலீடு
போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்சவரம்பு இல்லை.
இந்த நிலையில் மாதம் ரூ.9,500 வீதம் தொடர்ந்து முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் செலுத்தும் மொத்த தொகை ரூ.5.70 லட்சமாக இருக்கும்.
இந்த முதலீட்டுக்கு 6.7% வட்டி கணக்கிடப்பட்டால், ஐந்து ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் தொகை சுமார் ரூ.6.77 லட்சமாக இருக்கும். இதில் வட்டி வருமானம் மட்டும் ரூ.1.07 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.
10 ஆண்டுகளில் ரூ.16.34 லட்சம்
ஐந்து ஆண்டுகளுடன் திட்டத்தை முடித்துவிடாமல், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து முதலீட்டைத் தொடரும் போது கணக்கு மாறுகிறது.
பத்து ஆண்டுகளில் மாதம் ரூ.9,500 வீதம் செலுத்தினால், முதலீடு செய்த அசல் தொகை ரூ.11.40 லட்சமாக இருக்கும்.
இதற்கு கிடைக்கும் வட்டி சுமார் ரூ.4.94 லட்சம். இதன் மூலம் பத்து ஆண்டுகள் முடிவில் மொத்தமாக ரூ.16.34 லட்சம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டியது
இந்தக் கணக்கு தற்போதைய 6.7% வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்படலாம் என்பதால், முதலீடு செய்வதற்கு முன்பு நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்ப்பது அவசியம்.
