பங்குச்சந்தையில் டிவிடெண்ட் வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய பங்குகள் உள்ளன. மொத்தம் 10 நிறுவனங்கள் வரும் திங்கட்கிழமை டிவிடெண்ட் பெறுவதற்கான record date-ஐ நிர்ணயித்துள்ளன.
இதனால், அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க விரும்புபவர்களுக்கு இன்று முக்கிய நாளாகிறது.
Senco Gold பங்குதாரர்களுக்கு ரூ.1 டிவிடெண்ட்
Senco Gold நிறுவனம் 2026 நிதியாண்டிற்காக, ரூ.5 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ.1 இறுதி டிவிடெண்ட் வழங்க அறிவித்துள்ளது. இதற்கான record date ஆகஸ்ட் 24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் இந்தப் பங்கின் விலையில் சரிவு காணப்பட்டாலும், 2026-ல் இதுவரை சுமார் 7 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 67 சதவீத வருமானத்தையும் வழங்கியுள்ளது.
NALCO-வில் மொத்த டிவிடெண்ட் ரூ.11.50
National Aluminium Company (NALCO) 2026 நிதியாண்டிற்கு ஒரு பங்குக்கு ரூ.1 இறுதி டிவிடெண்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே மூன்று கட்டங்களாக இடைக்கால டிவிடெண்ட் வழங்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டுக்கான மொத்த டிவிடெண்ட் ஒரு பங்குக்கு ரூ.11.50 ஆக உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை record date கொண்ட பிற பங்குகள்
ஜில்லெட் இந்தியா ஒரு பங்குக்கு ரூ.60 என்ற அதிகபட்ச டிவிடெண்டை அறிவித்துள்ளது. International Gemmological Institute ரூ.2.55, Naturewings Holidays ரூ.1.60 டிவிடெண்ட் வழங்குகின்றன.
இதுதவிர AMJ Land Holdings, GK Energy, India Pesticides, Pudumjee Paper Products மற்றும் SJVN ஆகிய நிறுவனங்களும் திங்கட்கிழமை record date-ஐ எதிர்கொள்கின்றன.
