இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். டீ வாங்க கையில காசு இல்லை. அந்த நேரம் பாத்து வந்த நண்பன பாத்ததும், “நாளைய உலகின் டீக்கடை ஓனரே’னு சவுண்டா கூப்பிட்டேன். என்ன நெனச்சானோ தெரியல, அப்படியே யூடர்ன் அடிச்சி போயிட்டான்.
என்னனு யோசிச்சி பாக்கும்போது தான் தெரிஞ்சது, ‘நாளைய துணை முதல்வரே’னு போஸ்டர் ஒட்டுன காங்கிரஸ் காரர கூப்பிட்டு பாராட்டாம, அவங்க தலைவரு நோட்டீஸ் அனுப்பிருந்தாரு. அதான் இவனும் என்னோட புகழ்ச்சி புடிக்காம போயிட்டான் போல… update kumaru memes and trolls april 13
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 13

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஞாயித்துக்கிழமை மதியமே ஆபிஸ் ஞாபகம் வருதுன்னா..
வேலையில ஆர்வம் அதிகம்னு அர்த்தமா..?
அதுதான் கிடையாது.. வீட்ல நான்-வெஜ் சமைக்கலேன்னு அர்த்தம்..

செங்காந்தள்
அன்னப் பறவைகள் அழிஞ்சு போனதுக்கு பால்காரர்களும்,
அரிச்சந்திரன்கள் அழிந்து போனதற்கு மனைவிகளும் காரணமாக இருக்கக் கூடும்…!!!

Mannar & company™🕗
மை வைஃப் டூ மீ ~
வீட்டுக்குப் போனால் மனைவியால் நிம்மதி இல்லைன்னு ஆபிஸ்லேயே இருக்கும் ஆம்பிளைங்க நீங்க எங்க,
மாமியார் வீட்டுக்குப் போனால் நிம்மதி இல்லைன்னு அம்மா வீட்டிலேயே இருக்கும் பொம்ளைங்க நாங்க எங்க!

வன்ம குடோன்
‘எதிரிக்கு எதிரி நண்பன் ‘ ன்றது எங்க வேணா உண்மையா இருக்கலாம். ஆனா ஆபிஸ்ல பொருந்தாது.
உனக்கு புடிக்காத ஒருத்தனை திட்டினான்றதுக்காக மேனேஜரை நல்லவன்னு நினைச்சுறாத..
பாம்பு பாம்பு தான், உன்னை கொத்தாம விடாது..

கடைநிலை ஊழியன்
வொர்காலிக் மீ ~
நாளைக்கு வேற லீவ் னு சொல்றாங்க..
நம்ம வேற எப்போதும் திங்கட்கிழமை பொறுப்பா வேலைக்கு போயிருமா.. நாளைக்கு என்ன பண்ண னு வேற தெரியாது..
வேல பாக்காம பொழுதே போகாதே

கடைநிலை ஊழியன்
அடிக்குற வெயிலுக்கு, பைக்ல ஆபீஸ்க்கு போகும் போது, சிக்னல் ‘ல மாட்டாம போறதே, மிகப்பெரிய இளைப்பாறல் தான் !!

குருநாதா
டெய்லி ஆபிஸ்க்கு சீக்கிரம் போகனும்னு
நெனப்ப ஆனா தூங்கிருவ
இந்த குற்ற உணர்ச்சி
உன்னய ஒருநாள் சீக்கிரம் எந்திரிக்க வச்சுரும்
அதான் “ஞாயித்து கிழமை”

Sasikumar J
~ ஏங்க நாளைக்கு தமிழ் வருஷ பிறப்பு அதனால இன்னக்கி எதுவும் நான்வெஜ் வாங்க வேண்டாம்…!
~ அப்பாடா ரொம்ப சந்தோஷம்…!
~ அப்படிலாம் இல்ல வாங்க, கடையில போய் சாப்பிடலாம்…!
லாக் ஆஃப்