பொதுத் தொகுதியில் போட்டியிடுகிறார் திருமா

Published On:

| By Balaji

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவன், தனித் தொகுதியில் போட்டியிட்டால் நன்றாக இருக்காது.பொதுத் தொகுதியில் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும், சாதிகட்சி என்ற சாயத்தை போக்கமுடியும், அதனால் பொதுத் தொகுதியில் அதிக தலித் வாக்குகள் உள்ள தொகுதியை தேர்வு செய்ததில், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் பண்ருட்டி தொகுதியை தேர்வு செய்து தேர்தல் பணிகளை துவங்கிவிட்டார், பண்ருட்டி தொகுதியில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, இரண்டு நகராட்சியிலும், மேல்பட்டம்பாக்கம், துறைப்பாடி, இரண்டு பேருராட்சியிலும் தலித் வாக்குகள் கணிசமாக இருப்பதால் வெற்றி கணக்கு போட்டு தீவிரமாக வேலை செய்துவருகிறார்கள்,தேர்தல் செலவுகளை தொகுதி மக்களிடமே வசூல் செய்து பார்த்துக்கொள்கிறோம், தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள் அவர்களின் வாக்கையும் பெற்றால் நிச்சயம் வெற்றி என்று கணக்குப் போடுகிறார்கள் திருமாவின் கட்சியினர்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share