மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: கல்வி கட்டணம் உயர்வு!

Published On:

| By Selvam

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் 499 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13,610, பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11,610 கட்டணமாக இருந்தது.  இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ரூ.18,730 பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16,730 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2016-17ஆம் கல்வியாண்டுக்குப் பின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படாத நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தி தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

நெல்லை அரசு மருத்துவமனையின் அலட்சியம்!

தென்காசி தொகுதி… மறு வாக்கு எண்ணிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share