28 லட்ச ரூபாயில் இளவரசிக்காக ஒரு டாய்லெட்!

Published On:

| By Balaji

தாய்லாந்து நாட்டு இளவரசி சக்ரி சிரிந்தோர்ன், 3 நாள் சுற்றுப்பயணமாக கம்போடியா செல்ல இருக்கிறார்.

பயணத்தின் ஒரு பகுதியாக, ரத்னகிரியில் உள்ள பயணிகள் விடுதியில் தங்கி எழில்கொஞ்சும் யிக்லகேம் ஏரியையும் அவர் ரசிக்கவிருக்கிறார். இவருக்காக, ரூ. 28 லட்சம் செலவில் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன கழிவறை ஒன்று அவசர அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ’அவர் பயன்படுத்தியபிறகு இந்தக் கழிவறை அழிக்கப்படும்’ என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளவரசியின் ஒரு நாள் இரவு பயன்பாட்டுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share