தமிழ்நாடு என்ஜினியரிங் அட்மிஷன் (Tamil Nadu Engineering Admissions – TNEA) 2026க்கான ஆன்லைன் பதிவு (online registration) மே மாத இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செயல்முறை முழுவதும் டி.என்.இ.ஏ அதிகாரப்பூர்வ இணையதளம் (official website – tneaonline.org) மூலம் நடத்தப்படும்.
எப்படி அப்ளை பண்ணுவது?
டி.என்.இ.ஏ 2026 விண்ணப்ப செயல்முறை (application process) முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும்:
- ரெஜிஸ்ட்ரேஷன் (registration) – பெயர், மொபைல் நம்பர், ஈமெயில் ஐ.டி (email id) பதிவு
- லாகின் (login) செய்து தனிப்பட்ட விவரங்கள் (personal details) நிரப்புதல்
- கல்வி தகவல்கள் (academic details) பதிவு
- அப்ளிகேஷன் ஃபீ (application fee) செலுத்துதல்
- தேவையான டாக்குமெண்ட்ஸ் (documents) அப்லோட் (upload) செய்யுதல்
- இறுதி சமர்ப்பிப்பு (final submission)
வரும் மே 2026 பதிவு தொடங்கும், கடைசி தேதி ஜூன் 2026 முதல் வாரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு அட்மிஷன் செயல்முறை
டி.என்.இ.ஏ 2026 கவுன்சலிங் (counselling process) முறை:
- ரெஜிஸ்ட்ரேஷன் & டாக்குமெண்ட் அப்லோடு
- ராண்டம் நம்பர் (random number) வழங்கல்
- சரிபார்ப்பு (verification)
- ரேங்க் லிஸ்ட் (rank list) வெளியீடு
- சாய்ஸ் பில்லிங் (choice filling)
- சீட் அலாட்ட்மெண்ட் (seat allotment)
- கன்ஃபர்மேஷன் (confirmation)
- கல்லூரி சேர்ப்பு (college admission)
யார் அப்ளை பண்ணலாம்?
இந்த அட்மிஷனுக்கு 12ஆம் வகுப்பு (Class 12) பிசிக்ஸ் (physics), கெமிஸ்ட்ரி (chemistry), மேதமெடிக்ஸ் (mathematics) படித்திருக்க வேண்டும், குறைந்தபட்ச மார்க்ஸ் (minimum marks) தேவைப்படும்.
டி.என்.இ.ஏ 2026 பதிவு விரைவில் தொடங்க இருப்பதால், மாணவர்கள் முன்கூட்டியே டாக்குமெண்ட்ஸ் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்களே, இந்த சான்ஸை தவறவிடாமல், சரியான நேரத்தில் விண்ணப்பித்து உங்கள் என்ஜினியரிங் கனவை (engineering dream) நனவாக்குங்கள்!
