நீட் யுஜி 2026 அட்மிட் கார்டு வெளியீடு: ஹால் டிக்கெட் எப்படி டவுன்லோடு செய்வது?

Published On:

| By Santhosh Raj Saravanan

neet ug 2026 admit card download steps

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency – NTA), நீட் யுஜி (NEET UG) 2026 தேர்வுக்கான அட்மிட் கார்டு (Admit Card) வெளியிட்டுள்ளது.

பதிவு செய்த அனைத்து மாணவர்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் (neet.nta.nic.in) மூலம் தங்களின் ஹால் டிக்கெட் (hall ticket) டவுன்லோடு (download) செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ஹால் டிக்கெட் எப்படி டவுன்லோடு செய்வது?
  • அதிகாரப்பூர்வ இணையதளம் (official website – neet.nta.nic.in) செல்ல வேண்டும்
  • “நீட் யுஜி 2026 அட்மிட் கார்டு (NEET UG 2026 Admit Card)” லிங்க் (link) கிளிக் செய்ய வேண்டும்
  • அப்ளிகேஷன் நம்பர் (application number) மற்றும் பிறந்த தேதி (date of birth) அல்லது பாஸ்வேர்ட் (password) பதிவு செய்ய வேண்டும்
  • ஸ்க்ரீன்-ல் காணப்படும் பாதுகாப்பு பின் (security pin) உள்ளிட வேண்டும்
  • சப்மிட் (submit) செய்த பிறகு அட்மிட் கார்டு திரையில் தோன்றும்
  • அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் (print) எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
அட்மிட் கார்டில் என்ன விவரங்கள் இருக்கும்?

ஹால் டிக்கெட்டில் இடம்பெறும் முக்கிய தகவல்கள் என்னவென்றால், மாணவர் பெயர் (candidate name), ரோல் நம்பர் (roll number), தேர்வு மையம் (exam centre details), தேர்வு தேதி மற்றும் நேரம் (exam date & timing), புகைப்படம் (photograph). இந்த தகவல்கள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

முக்கிய அறிவுரை

அட்மிட் கார்டு இல்லாமல் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை. தவறான தகவல்கள் இருந்தால் உடனே அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டும். A4 சைஸ் பேப்பரில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.

ADVERTISEMENT

நீட் யுஜி 2026 தேர்வு மே 3, 2026 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் யுஜி 2026 அட்மிட் கார்டு வெளியீடு, தேர்வுக்கான இறுதி கட்டத்தை  நெருங்குகிறது. நண்பர்களே, இப்போ தாமதிக்காமல் உடனே உங்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து, எல்லா விவரங்களும் சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share