அதிர்ச்சியில் ஆசிரியர்கள்! மாதச் சம்பளம் வரலையா? காரணம் என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

tn teachers salary delayed january 2026 shocking news

“மாதக் கடைசி வந்தாலே அடுத்து சம்பளம் எப்போ வரும்னு எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் ஜனவரி மாசம், பொங்கல் பண்டிகை வேற வருது… கைல காசு இருந்தாதான் பண்டிகையைக் கொண்டாட முடியும்!” இப்படி ஆயிரக்கணக்கான கனவுகளோடு காத்திருந்த அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, புத்தாண்டின் தொடக்கமே ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

வழக்கமாக மாதத்தின் முதல் வேலைநாளில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் டிசம்பர் மாதத்திற்கான சம்பளம், இன்னும் பலருக்கு வந்து சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் கடைசித் தேதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியிலோ சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், ஜனவரி 2026 பிறந்தும், பல மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் ‘கிரெடிட்’ ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

காரணம் என்ன?

சம்பளம் தாமதமாவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் கிசுகிசுக்கப்படுகின்றன:

ADVERTISEMENT
  • நிர்வாகச் சிக்கல் (IFHRMS): அரசு ஊழியர்களுக்கான கருவூலப் பணப் பரிவர்த்தனை இணையதளத்தில் (IFHRMS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சம்பளப் பட்டியல் (Pay Bill) தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறுகிறது.
  • போராட்ட எதிரொலி?: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ‘ஜாக்டோ-ஜியோ’ (JACTTO-GEO) அமைப்பினர் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில், இந்தச் சம்பள தாமதம் ஆசிரியர்கள் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம் பாதிக்குமா?

“பொங்கல் பண்டிகைக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. துணிமணி எடுக்கணும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கணும். இப்போ போய் சம்பளத்தை நிறுத்தி வச்சா நாங்க என்ன பண்றது?” என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்தது என்ன?

சம்பளப் பட்டுவாடா தாமதம் குறித்துக் கல்வித் துறை அதிகாரிகளோ அல்லது கருவூலத் துறையோ உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் சம்பளத்தை விடுவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆசிரியர்களே… சம்பளம் வரலைனு பேனிக் (Panic) ஆகாதீங்க. அநேகமா இது சர்வர் பிரச்சினையாகத்தான் இருக்கும். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்னு நம்புவோம்.

ஒருவேளை 6ஆம் தேதி ஸ்ட்ரைக் ஆரம்பிச்சா, நிலைமை இன்னும் சிக்கலாகலாம். அதனால, சம்பளம் வந்தவுடனே முக்கியமான செலவுகளுக்குப் பணத்தை எடுத்து வச்சுக்கிறது புத்திசாலித்தனம்.

உங்க அசோசியேஷன் (Association) வாட்ஸ்அப் குரூப்ல வர்ற தகவல்களை மட்டும் நம்புங்க. வதந்திகளை நம்பாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share