டீச்சர் வேலைக்காக வெயிட் பண்றீங்களா? – வேகன்சி லிஸ்ட் ரெடியாகுது!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn school education department teacher vacancy data collection

“என்னப்பா… ‘கைல ஒரு பி.எட் (B.Ed) அல்லது டி.டி.இ (D.T.Ed) டிகிரி இருக்கு, டிஇடி (TET) எக்ஸாமும் பாஸ் பண்ணிட்டோம், ஆனா ஒரு கௌரவமான அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை எப்போ வரும்னு தெரியலையே’ன்னு பீல் பண்ணிட்டு இருக்கீங்களா?

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (TN School) நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், காலிப்பணியிடங்கள் குறித்த துல்லியமான தரவுகளைச் சேகரிக்கப் பள்ளிக்கல்வித்துறை தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

ADVERTISEMENT
வேகன்சி லிஸ்ட்ல என்னென்ன இருக்கு?

இந்தத் தடவை வேகன்சி கணக்கெடுப்புல எந்தெந்தப் பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு ஒருமுறை பாக்கலாம்:

  • முதுகலை ஆசிரியர்கள் (PG Assistants): மேல்நிலைப்பள்ளிகளில் (Higher Secondary) காலியாக உள்ள பாடவாரியான பணியிடங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.
  • பட்டதாரி ஆசிரியர்கள் (BT Assistants): நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் (Middle & High School) நிலவும் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
  • இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade Teachers): தொடக்கப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டறிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (CEO) உத்தரவிடப்பட்டுள்ளது.
  • பணி ஓய்வு விவரங்கள்: 2026ஆம் ஆண்டு மே மாத இறுதிக்குள் பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விபரங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பதவி உயர்வு வாய்ப்பு: ஆசிரியர் பதவி உயர்வு காரணமாக உருவாகும் காலிப்பணியிடங்களையும் துல்லியமாகக் கணக்கிடத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏன் இந்த டேட்டா கலெக்ஷன் ரொம்ப முக்கியம்?

பொதுவாக ஒரு பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு (Recruitment) நடக்குறதுக்கு முன்னாடி, இதுமாதிரி வேகன்சி லிஸ்ட் எடுக்குறதுதான் முதல் படி பாஸ். இந்த டேட்டா கிடைச்ச உடனே தான், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமா புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கு. முக்கியமா, அடுத்த கல்வியாண்டு (2026-27) தொடங்குறதுக்கு முன்னாடியே ஆசிரியர் நியமனங்களை முடிக்க அரசாங்கம் பிளான் பண்ணியிருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு.

ADVERTISEMENT

வேகன்சி லிஸ்ட் ரெடியாகுதுனாலே, சீக்கிரமே அறிவிப்பு வரும்னு அர்த்தம். அதனால சிலபஸை எடுத்து இப்போவே படிக்க ஆரம்பிங்க. உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், டிஇடி (TET) சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் இதையெல்லாம் இப்போவே தயாரா வச்சுக்கோங்க. அறிவிப்பு வந்த உடனே அப்ளை பண்ண வசதியா இருக்கும்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் டிஆர்பி (TRB) வெப்சைட்ல வர்ற லேட்டஸ்ட் நியூஸை அடிக்கடி செக் பண்ணுங்க. போட்டி அதிகமா இருந்தாலும், முறையான திட்டமிடல் இருந்தா அரசு ஆசிரியர் வேலைங்கிற அந்த ‘மெகா ஜாக்பாட்டை’ நீங்க ஈஸியா தட்டித் தூக்கலாம்.

ADVERTISEMENT

ஆசிரியர் பணிங்கிறது வெறும் வேலை மட்டும் இல்ல பாஸ், அது ஒரு சமூகப் பொறுப்பு. தமிழக அரசு எடுத்துருக்குற இந்தத் துரித நடவடிக்கை, பல்லாயிரக்கணக்கான தம்பி, தங்கச்சிகளோட அரசு வேலை கனவை நனவாக்கப்போகுது. முயற்சி பண்ணுனா இந்த 2026-ல நீங்களும் ஒரு மாஸ் டீச்சரா கலக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share