டிஜிட்டல் திண்ணை: திருவிக நகரில் திமுகவுக்கு எதிராக ”திருமா” திருவிளையாடல்.. ’கூட்டணி’ சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, வேல்முருகன்

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. இமயமலைக்கு போறீரா?

ADVERTISEMENT

நாம எதுக்கு போகப் போறோம்.. எஃப்.எம். ல் பாட்டு கேட்க சுகமா இருந்துச்சு.. அதான் ஹம்மிங்.. நான் சொல்ல வந்த சங்கதியை முதல்ல சொல்லிடுறேன்..

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அதிமுக வேட்பாளரா நிற்கிறாங்க.. திமுக வேட்பாளரா கே.எஸ்.ரவிச்சந்திரன் நிற்கிறாரு..

ADVERTISEMENT

திருவிக நகர் தொகுதியில திடீர்னு திமுக கூட்டணியில இருக்கிற விசிக நிர்வாகிகள், பொற்கொடிக்கு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க..

இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு பாதுகாப்பு தேவை. அவர் துணிச்சலாகப் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, அவருக்கு அரசியலில் சிறிது இடம் தேவை. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம்”னு திருமாவளவன் ஒரு பேட்டியில சொல்லி இருந்தாரு.. அதுக்கு அப்புறமாதான் திருவிக நகர் சிறுத்தைகள், உதயசூரியனுக்கு எதிராக இரட்டை இலை சின்னத்துல நிக்கிற பொற்கொடிக்காக எலக்‌ஷன் வேலை பார்க்கிறாங்க”ன்னு தெரிஞ்சது..

ADVERTISEMENT

இதே மாதிரி திருவிக நகர் தொகுதியில தவெக வேட்பாளர் பல்லவியோட ஆக்டிவ்ஸும் ரொம்பவே குறைவா இருக்கு.. இதுக்கு காரணம் என்னான்னு தவெக தரப்புல விசாரிப்ப, “பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா”வைதான் கை நீட்டுறாங்க.. பொற்கொடிக்கு மறைமுகமாக ஆதரவு தருகிறாராம் ஆதவ் அர்ஜூனா.

விசிக, தவெக மட்டும் இல்லாம வெளிப்படையாகவே, ”பொற்கொடியை ஆதரிக்கிறோம்.. நாங்க தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி வேட்பாளரை நிறுத்தாது”ன்னு தவாக தலைவர் வேல்முருகனும் அறிவிச்சிருக்காரு..

இதனால குழந்தையோட ஓட்டு கேட்கிற பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தரப்பு ரொம்பவே ‘ஸ்டிராங்’கா ஜெயிப்போம்னு நம்புறாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share