ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK Aadhav Arjuna

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று (ஏப்ரல் 7) தொடங்கி உள்ள நிலையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அக்கட்சி சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது வேட்புமனுவை மார்ச் 30, 2026 அன்று தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் மனைவி பெயரில் உள்ள சில நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்று கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளர்கள் தேவராஜன் மற்றும் முரளி வினோத் ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஆதவ் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த சொத்து விபரம்

ஆதவ் அர்ஜுனாவிடம் மொத்தம் 180 கோடி ரூபாய் அசையும் சொத்தும் அவரின் மனைவி டெய்ஸியிடம் 162 கோடி ரூபாய் அசையும் சொத்தும் உள்ளன.

இருவரிடமும் வணிக கட்டிடங்கள் உள்ளன. அதேநேரத்தில் விவசாய நிலங்களோ, விவசாயம் அல்லாத நிலங்களோ இருவரிடமும் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு: ஆதவ் அர்ஜூனாவிடம் 17.5 கோடி ரூபாயாகவும் அவரின் மனைவியிடம் 83 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது.

நகைகள் விபரம்

ஆதவ் அர்ஜுனாவிடம் சொந்தமாக 211 சவரன் தங்க நகை (1691 கிராம்) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி டெய்ஸி ஆதவ் அர்ஜூனாவிடம் 278 சவரனு தங்க நகை, (2,225 கிராம்) உள்ளது.

இவைபோக 24,109 கிராம் வெள்ளி பொருட்கள் ஆதவின் மனைவி டெய்ஸிடம் உள்ளன. இருவருக்குமே வணிகம் பிரதானத் தொழில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share