நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் போஸ்டர்கள் மற்றும் Glimpse வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர்கள் பாபி தியோல், ஜெகபதி பாபு, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கொடைக்கானல், கோவா, தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு சூர்யாவின் கங்குவா படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
10 மொழிகளில் உருவாகி வரும் கங்குவா படத்தின் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதம் முழுமையாக முடிந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள், தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 43 வது படமான புறநானூறு படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது சுதா கொங்கரா உடன் சூர்யாவிற்கு கருத்து வேறுபாடுகள் இருப்பதால் தற்போது படத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44 வது படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார்.
சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த ஆண்டு கங்குவா படத்தின் மூலம் சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
RCB vs CSK: ‘6 அபார வெற்றிகள்’… பிளே-ஆஃப்-க்கு சென்ற பெங்களூரு!
கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு
தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை? வானிலை மையம் ரிப்போர்ட்!