திமுகவுக்கு ஆதரவு- ஸ்டாலினை சந்தித்த பழ.நெடுமாறன், செ.கு. தமிழரசன்

Published On:

| By Mathi

Se.Ku. Tamilarasan Nedumaran Stalin

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பழ. நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பு மற்றும் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை பழ. நெடுமாறன், செ.கு.தமிழரசன் ஆகியோர் இன்று மார்ச் 30-ந் தேதி சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும் முதல்வர் ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட அக்கட்சியின் 8 வேட்பாளர்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செ.கு. தமிழரசன், “திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பது அம்பேத்கர் இயக்கங்களின் தலையாய கடமை. அம்பேத்கரிஸ்டுகளை ஒருங்கிணைத்து திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம்” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share