கோடைக்காலம் இன்றோடு நிறைவடைவதாக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். summer comes to end today
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி இறுதி தொடங்கி மக்களை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த மே 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது.
இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று (மே 16) தனது எக்ஸ் பக்கத்தில், ”இன்றோடு கோடை காலம் முடிவடைகிறது.
இன்று முதல் சென்னை மற்றும் வட தமிழ்நாட்டில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை எதுவும் காணப்படவில்லை, மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னையில் இந்த மே மாதத்தில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தாண்டாது.
கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக ஒரு பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகும். ஆனால் இப்போது முதல் முறையாக மே மாத நடுபகுதியில் உருவாகியிருக்கிறது.
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதில் அரேபிய கடலில் அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயல் உருவாக வாய்ப்புள்ளது.
இன்றைய நிலையை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் டெல்டா பகுதிகள், நாகை, மயிலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “ இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல், மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-05-2025 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது. summer comes to end today