தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.
இதில் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
சூலூர் வாக்காளர்கள் – மொத்தம் -3,03,541

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 மக்களவைத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ வி.பி. கந்தசாமியும், திமுக வேட்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் போட்டியிடுகின்றனர். தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் தளபதி முருகேசன். செந்தில் பாலாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அறியப்படுகிறார். திமுக அவருக்கு முதல் முறையாக வாய்ப்பு அளித்திருந்தாலும் கடுமையான சவால் இருக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் என்.எம்.சுகுமார், நாதக சார்பில் இராஜசேகர் ஆகியோர் களம் காண்கின்றனர்.
2021 தேர்தலில் சூலூர் தொகுதியில் வி.பி. கந்தசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் பிரிமியர் செல்வத்தை 31,932 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நமது சர்வே முடிவுபடி, இந்த தேர்தலில்
திமுக -36%
அதிமுக -39%
தவெக -18%
நாதக -5% சதவிகித வாக்குகள் பெறும்
தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி மீண்டும் சூலூர் தொகுதியை தக்கவைக்க வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
