மாநில சுயாட்சி… ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு : ஸ்டாலின் தீர்மானம்!

Published On:

| By Kavi

State autonomy Committee headed by retired judge

மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15) சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். State autonomy Committee headed by retired judge

தமிழக சட்டப்பேரவை 5 நாள் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது முதல்வர் ஸ்டாலின்  மாநில சுயாட்சி தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது.  இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய குழு அமைக்க வேண்டும். 

மத்திய- மாநில உறவுகளை ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும்; இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, நாகநாதன் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.

மத்திய அரசு- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராயும் குரியன் ஜோசப் குழு, ஜனவரி மாதம் தமது அறிக்கையை தாக்கல் செய்யும். 

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற  தத்துவத்தை முழுமையாக செயல்படுத்த செய்வோம்” என்று கூறினார். 

தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. State autonomy Committee headed by retired judge

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share