டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. இபிஎஸ் ஆட்டம்.. ’பாத்ரூம்’ போய் மாயமான தவெக வேட்பாளர்..’இணக்கம்’ காட்டும் ஸ்டாலின்.. முரட்டு பிடிவாதம் பிடிக்கும் ராகுல்

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. ராகம் ரொம்ப இழுவையா இருக்கே..

ADVERTISEMENT

வைரமுத்து ரொம்பவே நல்லா எழுதி இருக்காரு.. காலத்துக்கும் எல்லாத்துக்கும் பொருந்துகிற மாதிரி இருக்கே

என்னய்யா.. நீர் சொன்ன மாதிரியே தலைமை செயலாளரை மாத்திட்டாங்களே

ADVERTISEMENT

ஆமாய்யா.. நேத்து நாம டிஜிட்டல் திண்ணையில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இபிஎஸ் வலை விரிக்கிறாருன்னு போட்டிருந்தோம்.. அதுல சீப் செக்ரட்டிரியாக விரும்புறீங்களான்னு இபிஎஸ் கேட்டதுக்கு, “குடும்பத்துல இஸ்யூஸ் இருக்கு”ன்னு சொல்லி தட்டி கழிக்கிறாங்க ஐஏஎஸ் அதிகாரிகள்னு பெயரை சொல்லாம சொல்லி இருந்தோம்..

அப்படி இபிஎஸ் பேசின அதிகாரிதான் சாய்குமார்.. 2018-ல் இபிஎஸ்-ன் செக்ரட்டரியா இருந்தவரு.. அவரைத்தான் தொடர்பு கொண்டு இபிஎஸ் பேசியிருந்தாரு.. தொடக்கத்துல சீப் செக்ரட்டரி போஸ்ட் வேணாம்னு சொன்ன சாய்குமாரை இபிஎஸ் ரொம்பவே கன்வீன்ஸ் பண்ணி இருக்காராம்.. இப்ப சாய்குமார், சீப் செக்ரெட்டரின்னு எலக்‌ஷன் கமிஷன் அறிவிச்சிருச்சுய்யா..

ADVERTISEMENT

அதே மாதிரி லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு புதிய டிஜிபியா சந்தீப் மிட்டலை நியமிச்சிருக்கு எலக்‌ஷன் கமிஷன்.. இவரு யாருன்னா, இபிஎஸ் சிஎம் பதவியில் இருந்தப்ப 2020-ல் டெல்லி பணியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பியவர்.. அப்போ சந்தீப் மிட்டல் திரும்ப வந்தது பத்தி ஒரே பேச்சா இருந்ததுய்யா..

சரிய்யா.. நினைச்சதை சாதிச்சுட்டாரு.. எடப்பாடியில தவெக வேட்பாளர் என்னதான் ஆனாராம்?

எடப்பாடி தொகுதியில இபிஎஸ் போட்டியிடுறாரு.. அங்கே விஜய் கட்சியில தவெக வேட்பாளரா அருண்குமார் அறிவிக்கப்பட்டார்.. அவரும் வேட்பு மனு எல்லாம் தாக்கல் செஞ்சிருந்தாரு.. ஆனா வேட்பு மனு பரிசீலனை அன்னைக்கு ஒரே களேபரமாகிடுச்சு.. அருண்குமாரை கடத்திட்டாங்க.. அருண்குமாரை காணவில்லைன்னு செம்ம பரபரப்பாகிடுச்சு..

சரி என்னதான் ஆச்சுன்னு தவெக நிர்வாகிகளிடம் கேட்டப்ப, “நாமினேஷன் பைல் பண்றதுக்கு முதல் நாள் எல்லாரும் டிவிகே ஆபீசிலதான் இருந்தோம்.. நல்லாதான் பேசிட்டு இருந்தாரு.. மறுநாள் நாங்க எல்லாரும் போய் நாமினேஷன் பைல் பண்ணிட்டு மறுபடியும் ஆபீசுக்கு வந்துட்டோம்.. அவரு வீட்டுக்குப் போயிட்டாரு..

ஆனா 2 இடத்துல அருண்குமார் கையெழுத்து இல்லாம இருந்துச்சு.. அதனால அவரை கையெழுத்து போட வாங்கன்னு கூப்பிட்டோம்.. அருண்குமாரும் கட்சி ஆபீசுக்கு வந்து பேசிட்டு இருந்தாரு..

அங்க, விட்டுப் போன 2 இடத்துல கையெழுத்து போடுறதுக்கு முன்னால, ‘பாத்ரூம்’ போயிட்டு வந்துடறேன்னு போனவர்தான்.. சாயங்காலம் வரைக்கும் ஆளே திரும்ப வரலை..நாங்களும் தேடாத இடம் இல்லை.. இப்ப அந்த 2 கையெழுத்து போடாததால அருண்குமாரோட வேட்பு மனு ரிஜெக்ட் ஆகிடுச்சு”ன்னு சொல்றாங்க..

ஆனா, “தவெக வேட்பாளர் காணாம போனதுக்கு பின்னாடி இபிஎஸ்தான் இருக்காரு.. இபிஎஸ்னாலதான் அருண்குமாருக்கு என்னமோ ஆயிருச்சு”ன்னு திமுககாரங்க குண்டை வீசிட்டு இருக்காங்கய்யா..

அப்படியா.. மோடி வர்றாரு.. அமித்ஷா வர்றாரு.. பியூஸ் கோயல் இங்கேயே இருக்கிறாரு… காங்கிரஸ் லீடர்ஸ் யாருமே தமிழ்நாட்டுக்குள்ள எட்டிப்பார்க்கலையே என்னாச்சாம்?

நீர் சொல்றதும் உண்மைதான்.. புதுச்சேரியில கூட கார்கே, ராகுல் காந்தி பிரசாரம் செஞ்சுட்டாங்க.. தமிழ்நாட்டுக்குள்ள இன்னமும் ’காங்கிரஸ் மேலிட’ கால்கள் படாமதான் இருக்குது.. திமுக தரப்பில இருந்தும் ஸ்டாலின், ராகுல் ஒரே மேடையில பேசுறதுக்கான மூவ்ஸ் நடந்துகிட்டு இருக்குதாம்…

இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “புதுச்சேரியில ஏப்ரல் 6-ந் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செஞ்சாரு. அன்னைக்கு ஸ்டாலினும் அங்கே பிரசாரம் பண்ணினாரு.. அதனால புதுச்சேரியில ஒரே மேடையில காலையிலோ சாயங்காலமோ ஸ்டாலினும் ராகுலும் ஒன்னா பிரசாரம் செய்யற மாதிரி ராகுல் காந்திகிட்ட நேரம் கேட்டோம்.. ஆனா அவங்க ‘டைம் இல்லை”ன்னு சொல்லிட்டாங்க..

என்னதான் திமுக கூட்டணியில காங்கிரஸ் ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்திருந்தாலும் அவங்க வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு முன்னாடி கூட, “அருமைச் சகோதரர் ராகுல் காந்தி” அறிவிக்கப் போகும் வேட்பாளர்னு சொல்லிதான் ஸ்டாலின் பிரசாரம் செஞ்சாரு.. அதே மாதிரி வேட்பாளர்களை அறிவிச்ச பிறகும், “அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளர்”னு சொல்லியும் பிரசாரம் செய்யுறாரு ஸ்டாலின்…

ஸ்டாலினின் இந்த ஸ்மூத் மூவ்வை காங்கிரஸ் புரிஞ்சுக்கிற மாதிரியே இல்லைன்னுதான் தோணுது.. ஏன்னா எப்பவுமே திமுக கூட்டணியில ஏழரையை கூட்டுற பிரவீன் சக்கரவர்த்தி 2 நாளைக்கு முன்னாடி கூட, ”நாங்க அனுமார் மாதிரி. எங்க பலம் எங்களுக்கே தெரியாது.. திமுக கூட்டணியில் நாங்கள் கூடுதல் இடங்களை பெற முயற்சித்தோம். ஒரு பக்கம், ஒரு சின்ன தோசையைக் கொடுத்து பங்கு போட்டு சாப்பிடுங்னு சொல்றாங்க.. அங்கிட்டு எங்களுக்கு கல்யாண விருந்தே வைக்க கூப்பிடுறாங்க..”ன்னு இன்னமும் குட்டையை குழப்பிட்டுதான் இருக்கிறாரு.. எலக்‌ஷன் நாமினேஷன் முடிஞ்சு பிரசாரம் நடக்கிற நேரத்துல இப்படி பேசிகிட்டு இருக்கிறாங்க.

இருந்தாலும் இப்பவும் கூட, ராகுல் காந்தியோட ஒரே மேடையில ஸ்டாலின் பிரசாரம் செய்யுறதுக்கு நேரம் கேட்டுகிட்டுதான் இருக்கிறோம்.. கோவை பெல்ட்ல 2 இடங்களில்ல காங்கிரஸ் போட்டியிடுது.. அதே மாதிரி கன்னியாகுமரியிலும் அதிகமா போட்டியிடுது.. இந்த மாதிரி ஏரியாவுல ராகுலும் ஸ்டாலினும் ஒன்னா பிரசாரம் செய்யலாம்.. 2, 3 பாயிண்ட்டுல கூட்டாக பிரசாரம் செஞ்சா தாக்கம் ஏற்படும்.. இன்னும் சொல்லப் போனா திருச்சி மாதிரி சென்டர் பாயிண்ட்டுல ஒன்னா பிரசாரம் செய்யலாம்னு கூட டைம் கேட்டுகிட்டு இருக்கோம்.. ராகுல் சைடுல இருந்து கடைசி நேரத்துல பார்க்கலாம்னு மட்டும் சொல்றாங்க.. அடுத்த வாரத்துல இப்படி ஒன்னா சேர்ந்து பிரசாரம் செஞ்சாதானே நல்லா இருக்கும்..

இப்ப பாஜகவுல பார்த்தீங்கன்னா மோடி வந்துட்டு வந்துட்டு போறாரு.. அமித்ஷா பிரசாரம் செய்யுறாரு… அதோட 6 மாநில சிஎம்மை அனுப்புறாங்க.. ஆனா, பிரசாரத்துக்கு வாங்க.. ஒன்னா பேசுவோம்னு சொல்லி கூப்பிட்டும் கூட ராகுல் காந்தி சைடுல இருந்து சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலைன்னா என்ன செய்யுறது?”ன்னு ஆதங்கப்படுறாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share