செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஒரு மெகா ‘ஜாக்பாட்’ அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு. மத்திய அரசின் கீழ் இயங்கும் எஸ்பிஎம்சிஐஎல் (SPMCIL) நிறுவனம், 2026ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியிடங்களை நிரப்பத் தற்போது மெகா ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “ஐடிஐ முடிச்சவங்க முதல் இன்ஜினியரிங் முடிச்சவங்க வரை எல்லாருக்கும் இதுல இடம் இருக்கு!”
காலியிடங்கள் மற்றும் தகுதி விவரங்கள்
இந்த 536 காலியிடங்கள்ல எந்தெந்தப் பதவிக்கு நீங்க ‘Apply’ பண்ணலாம்னு ஒருமுறை ‘Check’ பண்ணிக்கோங்க பாஸ்:
- சூப்பர்வைசர் (Supervisor): இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கச் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma) அல்லது பி.இ/பி.டெக் (B.E/B.Tech) முடித்திருக்க வேண்டும்.
- ஜூனியர் டெக்னீஷியன் (Junior Technician): ஐடிஐ (ITI) முடித்த தம்பிகளுக்கு இது ஒரு பெரிய சான்ஸ். பிரிண்டிங், மெக்கானிக்கல் எனப் பல பிரிவுகளில் இடங்கள் இருக்கு.
- ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டென்ட் (Junior Office Assistant): ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருந்தால் போதும். கூடவே கம்ப்யூட்டர்ல டைப்பிங் ஸ்பீடு இருக்கணும் பாஸ்.
- ஃபயர்மேன் (Fireman): 10ஆவது வகுப்பு தேர்ச்சியுடன் ஃபயர் ஃபைட்டிங் (Fire Fighting) பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: பதவிக்கு ஏத்த மாதிரி மாதம் 18,780 முதல் 1,03,000 ரூபாய் சம்பளம் மற்றும் இதர சென்ட்ரல் கவர்மெண்ட் சலுகைகள் கிடைக்கும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
வயது வரம்பு: (15.07.2026 தேதியின்படி) குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். கவலைப்படாதீங்க பாஸ், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
பொதுப்பிரிவு, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் (UR/OBC/EWS) விண்ணப்பதாரர்களுக்கு **ரூ. 600 ரூபாய், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி (SC/ST/PwD) மாணவர்களுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே.
விண்ணப்பிக்க கடைசி நாள் மே 19, 2026 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 19 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க பாஸ். கடைசி நேரத்துல சர்வர் ‘பிஸி’ ஆகி அப்ளிகேஷன் லோட் ஆகாம போக வாய்ப்பு இருக்கு. இது மத்திய அரசு வேலைங்கிறதால, ஜெனரல் அவேர்னஸ் (General Awareness) மற்றும் ஆப்டிட்யூட் (Aptitude) மேட்டர்ல ஸ்ட்ராங்கா இருங்க.
உங்களுடைய ஐடிஐ அல்லது டிப்ளமோ சர்டிபிகேட் மற்றும் ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) எல்லாம் ஒரிஜினலா இருக்கான்னு ஒருமுறை செக் பண்ணிக்கோங்க. அப்ளை பண்ணும்போது ஸ்கேன் பண்ணி அப்லோட் பண்ண வசதியா இருக்கும். மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, நொய்டான்னு இந்தியாவோட பல முக்கிய இடங்கள்ல வேலை பார்க்க ‘சான்ஸ்’ கிடைக்கும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் எஸ்பிஎம்சிஐஎல் (SPMCIL) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.spmcil.com என்ற முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு கௌரவமான அரசு வேலை கிடைக்குறது ஒரு பெரிய ‘ஜாக்பாட்’. 536 வேகன்சிங்கிறது சாதாரண விஷயம் இல்ல பாஸ். கஷ்டப்பட்டுப் படிச்சு இந்த ‘கோல்டன் டிக்கெட்’ வாய்ப்பைத் தட்டித் தூக்குங்க.
