Honor Band 9: கம்மி விலை, நீடித்த பேட்டரி… உண்மையிலேயே செம ஸ்மார்ட்!

Published On:

| By Manjula

honor band 9 debuts smart watch

ஆயிரம்தான் அனலாக் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச் என பல வகைகள் இருந்தாலும் ஸ்மார்ட் பேண்ட் என்றால் நம்மில் பலருக்கு தனி பிரியம் உண்டு. அந்தவகையில் பல சிறப்பம்சங்களுடன் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது ஹானர் பேண்ட் 9. honor band 9 debuts smart watch

Dhanush: நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தின் இசையமைப்பாளர் யார்?

பட்ஜெட் விலையில் ப்ரீமியமான ஸ்மார்ட் பேண்ட் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பல்வேறு ஹெல்த் மானிட்டர்களுடன் சீனாவில் வெளியாகி இருக்கிறது இந்த ஸ்மார்ட் பேண்ட்.

ரூ.2,930 என்கிற விலையில் விற்பனைக்கு வரும் இந்த ஹானர் பேண்ட் 9-ஐ ஹானர் ஹெல்த் ஆப் மூலமாக பயன்படுத்தலாம். ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பேண்ட் 9, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

honor band 9 debuts smart watch

Suriya: இப்படி ஒரு படத்தை ‘மிஸ்’ பண்ணிட்டாரே… புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்!

ஹானர் பேண்ட் 9 பற்றிய சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்:-

  • 14 நாட்கள் பேட்டரி பேக்கப்.
  • 1.57 இன்ச் ப்ரீமியம் கர்வ்ட் அமோலெட் டிஸ்ப்ளே.
  • 60Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 302ppi டென்சிடி கொண்டுள்ளது.
  • ப்ளூடூத் எல்ஈ வி 5.3 மற்றும் என்எப்சி உள்ளது.
  • 4MP ரேம் மற்றும் பர்ப்பிள், ப்ளாக், ப்ளூ ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும்.
  • ஆக்சிலரோ மீட்டர், ஹார்ட் ரேட் சென்சார், கைரோ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
  • வாக்கிங், ரன்னிங் உள்ளிட்ட 94-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளைக் கொண்டுள்ளது.
  • ப்ளட் ஆக்சிஜன் லெவல் மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் ட்ராக்கிங் மானிட்டர் போன்றவை உள்ளன.
  • சிலிகான் ஸ்ராப் மற்றும் ரெயின்போர்ஸ்ட் பாலிமர் பைபர் கேஸ் மெட்டாலிக் பினிஷிங் உடன் இடம் பெற்றுள்ளது.
  • 16.3 கிராம் எடையில் ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் ஐஓஎஸ் 11.0 ஓஎஸ் சப்போர்ட்டிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
  • மியூசிக், கேமரா ஆகியவற்றை கன்ட்ரோல் செய்யலாம், கூடுதலாக வெதர் அப்டேட்டும் உள்ளது.

-பவித்ரா பலராமன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்? – செல்வப்பெருந்தகை பதில்

”தாமரை மலந்தே தீரும்” : பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை உறுதி!

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி

honor band 9 debuts smart watch

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share