dhanush ilaiyaraaja biopic first look
‘இசைஞானி’, ‘இசைக்கடவுள்’ என உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் புகழப்படும், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் தற்போது ‘ராயன்’, ‘குபேரா’ படங்களில் மிகுந்த பிஸியாக இருக்கிறார். இதில் தன்னுடைய 5௦-வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடிப்பதால், இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் தனுஷுடன் இணைந்து செல்வராகவன், பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
”தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்” : கிருஷ்ணசாமி
மறுபுறம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதனால் ‘குபேரா’விற்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இதற்கிடையில் அடுத்ததாக இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதை தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நேற்று (மார்ச் 19) அறிவித்தார்.
An epic journey begins pic.twitter.com/A7bQAO1Vy7
— Dhanush (@dhanushkraja) March 19, 2024
இந்தநிலையில் தற்போது லீலா பேலஸில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மார்ச் 2௦) வெளியாகி இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை ‘கேப்டன் மில்லர்’ புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். தன்னுடைய பயோபிக்கிற்கு இளையராஜாவே இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது. இதில் இளையராஜா உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
#ilayaraja biopic launch!
Here is entry video @dhanushkraja @ikamalhaasan #Dhanush pic.twitter.com/nY8gNpTedH
— smritigit Paul (@smritigit_pal) March 20, 2024
படத்தினை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெர்க்குரி மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
CONNEKT MEDIA – PK PRIME PROD – MERCURY MOVIES present #Dhanush in and as "ILAIYARAAJA" directed by Arun Matheswaran. Music by Ilaiyaraaja himself.
This is a big budget biopic. it is said that many senior stars will do a cameo in this film. pic.twitter.com/5QpzOFLcHa
— Mariyaan ᵏᵉᵛᶦⁿ (@KevinDBlood) March 20, 2024
விழாவில் தனுஷ், இளையராஜாவுடன் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதோடு வெற்றிமாறன், படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தாமரை மலந்தே தீரும்” : பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை உறுதி!
”தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்” : கிருஷ்ணசாமி
தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி