prithviraj sukumaran suriya aadujeevitham

Suriya: இப்படி ஒரு படத்தை ‘மிஸ்’ பண்ணிட்டாரே… புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்!

சினிமா

prithviraj sukumaran suriya aadujeevitham

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சூர்யா ஒரு நல்ல படத்தை மிஸ் செய்துவிட்டதாக, அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக ‘கங்குவா’ வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி மிரட்டி விட்டது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தினை சமூக வலைதளங்களில் வெகுவாகக் புகழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் இயக்குநர் அளித்த பேட்டியால் சூர்யா ரசிகர்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர்.

வெறுப்புப் பேச்சு : தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட மத்திய பாஜக அமைச்சர்!

படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி சமீபத்தில் அளித்த பேட்டியில் முதலில் படத்தின் கதையை  சூர்யாவிடம் தான் கூறியதாகவும், ஆனால் ஒருசில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய் விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த பேட்டி இணையத்தில் வைரலாக இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தால், அவரின் திரை வாழ்க்கையில் நிச்சயம் இப்படம் ஒரு மைல்கல்லாக இருந்திருக்கும்.

இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டாரே, என வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

GOLD RATE: மீண்டும், மீண்டும் உயரும் தங்கம்… இதுக்கு ஒரு எண்டு இல்லையா?

பிழைப்பு தேடி அரபு நாடு செல்லும் ஒருவன் அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறான். அங்கு அவன் படும் கஷ்டங்களை உருக்கத்துடன் சொல்லும் திரைப்படமாக ‘ஆடு ஜீவிதம்’ உருவாகி இருக்கிறது.

பிருத்விராஜ் நாயகனாக நடித்திருக்கும் இப்படம் வருகின்ற மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. அதே பெயரில் பிளெஸ்ஸி தற்போது அதனை படமாக எடுத்துள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஸ்டாலின்

‘சலார்’ படத்திற்கு பிறகு பிருத்விராஜ் நடித்திருக்கும் படம் மற்றும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதை என்பதால் ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி

சிலிண்டர் 500 ரூபாய்..100 நாள் வேலை இனி 150 நாள்..சுங்கச் சாவடிகள் அகற்றம்..திமுகவின் தேர்தல் அறிக்கை இதோ!

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் பலம் என்ன? வாக்கு சதவிகிதம் சொல்லும் டேட்டா ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *