சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ : எவ்வளவு வசூலித்தது தெரியுமா?

Published On:

| By Kavi

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

சுதா கொங்கரா இயக்கத்தில், 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம், உலகளவில் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக , பல்வேறு தரப்பினரும் இத்திரைப்படத்தின் வசூல் குறித்து மாறுபட்ட தகவல்களை கூறி வந்தனர். ‘பராசக்தி’ உலகளவில் 80 முதல் 85 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாகவும், 100 கோடி வசூல் செய்வது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வந்த நிலையில், வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share