”பெண்களை தொந்தரவு செய்தால் எஸ்கேப் ஆக முடியாது” – முதல்வர் விஜய் வார்னிங்!

Published On:

| By Kavi

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 9) தொடங்கி வைத்தார். 

முதலில் முதலமைச்சர் விஜய் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப்படை லட்சினை  மற்றும் வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார். 

ADVERTISEMENT

ஜீரோ டாலரன்ஸ்தான்

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், ”ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமா பீல் பண்ணும். அத நெனச்சாலே ரொம்ப சந்தோஷமா பீல் பண்ணும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் இன்னைக்கு இந்த சிங்கப்பெண் சிறப்பு படையை தொடங்கி வைக்கிற இந்த நிகழ்வு. உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒன்னு, சந்தோஷமான ஒன்னு.

ADVERTISEMENT

நம்ம பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, ஒவ்வொரு வீட்டில இருக்கிற பெண் குழந்தைகள்… இவங்க எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வோம்னு சொன்னோம்.  எலக்ஷனுக்காக மட்டுமே கிடையாது. மனசுலிருந்து நிஜமா, உண்மையா, உணர்வு பூர்வமா சொன்னதுதான்.

பெண்களுக்கு எதிரான இந்த கொடுமைகள்ல நமக்கு எப்பவுமே ஜீரோ டாலரன்ஸ்தான். அதுல ரொம்ப உறுதியா இருக்கிறோம்.  சொன்னது எல்லாமே செய்யணும், கொஞ்சம் கொஞ்சமா படிப்படியா அத செயல்ல கொண்டு வரணும். அதுல ரொம்ப தெளிவா இருக்கிறோம். அதனாலதான் ஆட்சிக்கு வந்த உடனே இந்த குறைந்த நாட்களுக்குள்ளேயே இதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள், பெண் குழந்தைகள் எல்லாருமே பாதுகாப்பா, தன்னம்பிக்கையோடு இருக்கணும்; அதுக்கான முதல் கட்டம் தான் இந்த ஸ்டெப்.

ADVERTISEMENT

மனசு பதறுது

இது வந்து மனசுக்கு ஒரு மனநிறைவை கொடுத்தாலும், அதே நேரத்தில பெண்களை பத்தின சில செய்திகள் எல்லாம் கேட்கும்போது உண்மையிலேயே மனசு பதறுது, கண்ணு கலங்குது. அது கண்ட்ரோல் பண்ணவே முடியல. ஏன்னா, நடக்கிற கொடுமைகள் எல்லாம் யாருக்குங்க? நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க தானே, எப்படி மனசு பதறாம இருக்கும்?

அனால் பெண்களுக்கு எதிரா இதெல்லாம் ஏன் நடக்குது, எதுக்கு நடக்குதுன்றது மத்தவங்க மாதிரி ரீல்ஸ்லயும் இன்ஸ்டாலயும் தேடிட்டு இருக்க முடியாது, ரியாலிட்டிய புரிஞ்சுக்கணும். சோ, இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏன் நடக்குது அப்படின்றத அனலைஸ் பண்ணி பார்க்கும்போது, சுத்தி சுத்தி பார்த்தீங்கன்னா ஒரே இடத்தில தான் வந்து நிக்குது… போதை பொருள் நடமாட்டம்! அதை வேரோட பிடுங்கி எரியணும்.

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றுலுமாக ஒழிக்கணும்!

2026 போன மாசம் மே மாசம் 10-ஆம் தேதி இந்த பிரச்சனை புதுசா முளைச்சு வந்துரல. இத பல வருஷமா இருக்கிற பிரச்சனை. பல வருஷமா இதை கண்டுக்காம விட்டதுதான் அந்த வேர் இவ்ளவு ஆழமா பரவி இருக்குது. இத பல வருஷமா கண்டுக்காம விட்டது யார் என்றது நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல, அது உங்களுக்கே நல்லா தெரியும். இப்ப அதை பத்தி பேசியும் பிரயோஜனம் இல்லை.

முதல்ல இந்த போதை பொருள் நடமாட்டத்தை வேரோட பிடுங்கி எரியணும். அப்படி எறிஞ்சாதான் இந்த பெண்களுக்கான இந்த சேப்டி ரொம்ப ஸ்ட்ராங் ஆகும். இது ரெண்டுமே ஸ்ட்ராங் ஆனாலே ஆட்டோமேட்டிக்கா சட்டம் ஒழுங்கும் சரியாகும்.

இந்த மூணு விஷயம் சொன்னேல… இந்த போதை பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான இந்த கொடுமை, இந்த சட்டம் ஒழுங்கு, இது மூணுமே ஒன்னுக்கு ஒன்னு இன்டர்லிங்க் தான். இதுவும் இப்ப புதுசா வந்த பிரச்சனை கிடையாது, பல வருஷமா இது இன்டர்லிங்கடாதான் இருக்குது. இதெல்லாம் ஏன், எதுக்குன்றது இப்ப முக்கியம் இல்லை, இது எப்படி சரி செய்ய போறோம்ன்றதுதான் முக்கியம்.

தனி மனித ஒழுங்கு

அதே நேரத்துல இன்னொன்னையும் நம்ம மனசுல எடுத்துக்கணும். இந்த பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, இது வெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது மட்டும்தானா அப்படின்னு கேட்டீங்கன்னா இல்ல, இது சமூக ஒழுங்கும் சம்பந்தப்பட்டடிருக்கு. தனி மனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டடிருக்கு. தனி மனிதன் ஒழுங்கா இருந்தாலே அந்த சமூகம் தன்னால மாறும். ஒரு கட்டுப்பாட்டோட, ஒரு பொறுப்பா இருந்தாலே இந்த மாதிரி பல பிரச்சனைகளை கண்ட்ரோல் பண்ணலாம்.

படிக்கிற இடத்துல, வேலைக்கு போற இடத்துல, டிராவல் டைம்ல, டெய்லி லைஃப்ல பயம் இல்லாம, மரியாதையோட நம்ம பெண்கள் வாழணும். அதுக்கான ஒரு அட்மாஸ்பியரை நம்ம கிரியேட் பண்ணணும்; அதுதான் நம்மளுடைய ஃபர்ஸ்ட் டார்கெட்.

எச்சரிக்கை

இவ்வளவு நேரம் நான் இதெல்லாம் ரொம்ப சாப்டா சொல்லிட்டு இருந்தேன், ஆனா பெண்களை தொந்தரவு செஞ்சுட்டு அப்படியே எஸ்கேப் ஆகி போயிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு நான் ஒரு வார்னிங்காவே சொல்றேன்!

பெண்கள் பாதுகாப்பை டிஸ்டர்ப் பண்றவங்க யாரா இருந்தாலும் அதை சகிச்சிக்கவே முடியாது. அவங்களுக்கான தண்டனை, அவங்களுக்கான அந்த தண்டனைக்கான அந்த நடவடிக்கைகள் எல்லாமே போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து ரொம்ப கடுமையான ஒரு தண்டனையா இருக்கும், கடுமையான ஒரு நடவடிக்கைகளா இருக்கும். அந்த தண்டனை, அவங்களுக்கான அந்த சார்ஜ் ஷீட் எல்லாமே ரொம்ப பாஸ்ட்டா, ஸ்பீடா செயல்படுத்தப்படும்.

என்ன ஒன்னு, அந்த ஸ்பீட்ல நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட்டற கூடாது, இதையும் காவல் அதிகாரிகள் மைண்ட்ல எடுத்துக்கணும். தப்பு செஞ்சவங்களுக்கு மட்டுமே அந்த உண்மையான கடுமையான தண்டனை கோர்ட் மூலியமா வாங்கி தரணும். அப்பதான் அதை பார்த்து தப்பு செய்ய நினைக்கிறவங்களுக்கு கூட, தப்பு செய்யக்கூடாது என்ற அந்த ஒரு பயம் வரணும்.

ரூ.354 கோடி ஒதுக்கீடு

இந்த சிங்கப்பெண் சிறப்பு படைக்காக நம் அரசு சார்பாக முதல் கட்டமாக 354 கோடிக்கு மேல நிதி ஒதுக்கப்பட இருக்கு. இந்த திட்டத்தோட இரண்டாவது கட்டமா இந்த படைக்காக மட்டுமே 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.

பெண்களோட பாதுகாப்பை ஸ்ட்ராங் செய்ய மாடர்ன் பெசிலிட்டீஸ் இருக்கிற வாகனங்களும், நவீன உபகரணங்களும், தொழில் நுட்ப சாதனங்களும் அலாட் செய்யப்பட இருக்கு. ஆல்ரெடி வுமன் சேப்டிக்காக செயல்படுற அமைப்புகளுக்கு அடிஷனல் ஸ்ட்ரென்த்தாக சப்போர்ட்டா இந்த சிங்கப்பெண் படை செயல்படும் என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்ல விரும்புறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கறதுக்கு முன்னாடியே அதை தடுக்கிற காவல் நடவடிக்கையில் இந்த படை முக்கிய பங்கு வகிக்கும். ஃபீல்டு வொர்க்ஸ் அண்ட் பிரிவென்டிவ் ஆக்ஷன்ஸ்ல இந்த படை ஈடுபடுறதால, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் வழக்கு விசாரணையிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதையும் இன்னும் அதிக கவனம் செலுத்த முடியும்.

பெண்களை ஃபாலோ பண்றது, பாலியல் தொல்லை தர்றது, டார்கெட் பண்ணி திரும்ப் திரும்ப தொந்தரவு செய்றது, பெண்கள் கடத்தல் முயற்சி, பப்ளிக் பிளேஸ்ல அசிங்கமா நடந்துக்கறதுக்கு, பஸ்ல தொல்லை தர்றது, கூட்டத்தில பெண்களுக்கு தொல்லை தருவது மாதிரி தப்பை தடுக்கறதுல ரொம்ப முக்கியமா இந்த சிங்கப்பெண் படை செயல்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடுவடிக்கை எடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக ட்ரோன் வாயிலாக பெட்ரோல் மூவ்மென்ட் அறிமுகப்படுத்தப்படும். நம்ம வீட்டு பெண்கள் அவங்களோட ட்ரீம்ஸ் அண்ட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் என்ன அப்படின்றத நம்ம அரசு நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கு, அதை கொஞ்சம் கொஞ்சமா நாங்க செயல்படுத்துவோம். உங்களுக்கான மரியாதையும் தான், உங்களுக்கான அந்த கண்ணியமும் தான் நம் அரசினுடைய ஹையஸ்ட் அண்ட் மோஸ்ட் இம்பார்டன்ட் பிரயாரிட்டி.

இந்த ஷார்ட் ஸ்பேன்ல இந்த சிங்கப்பெண் சிறப்பு படையை நடைமுறைக்கு கொண்டு வந்து, இதுக்கு ரொம்ப கடுமையா உழைச்ச காவல்துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளை தெரிவிச்சுக்கிறேன்.

இந்த நேரத்தில என்னை பொறுத்தவரைக்கும் ஒரு கவர்மெண்ட்டோட முதல் சக்சஸ், முழு சக்சஸ் இன்பராஸ்ட்ரக்சரோட வளர்ச்சியிலயோ, பொருளாதார வளர்ச்சிலயோ மட்டுமே இல்லை. அந்த ஸ்டேட்டோட பெண்களும் குழந்தைகளும் மரியாதையா வாழ்றாங்களா அப்படின்றதுலதான் அந்த கவர்மெண்டோட முழு சக்சஸுமே இருக்கு. அதோட சேர்ந்ததுதான் மற்ற எல்லா வளர்ச்சியும், அதிலயும் நாங்க ஃபுல் கான்சென்ட்ரேட் பண்ணுவோம்” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share