தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.
இதில் சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
சிங்காநல்லூர் வாக்காளர்கள் – மொத்தம் -2,66,058

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 மக்களவைத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளர் ஜெயராமன் சற்று செல்வாக்கு உள்ளவர். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் உடுமலை தொகுதியில் போட்டியிட்டவர். நாடாளுமன்ற தேர்தலின் போது அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டவர். இப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வேட்பாளருக்கு பெரிய ஆதரவு இல்லாத நிலை இருக்கிறது.
இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஸ்ரீ கிரிபிரசாத், நாதக சார்பில் கு.நேருஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
2021 தேர்தலில் கே.ஆர்.ஜெயராம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக்கை 10,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நமது சர்வே முடிவுபடி, இந்த தேர்தலில்
திமுக (காங்கிரஸ்)-41%
அதிமுக-38%
தவெக-15%
நாதக-5% வாக்குகள் பெறும்.
இந்த முறை சிங்காநல்லூரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
