பியூட்டி டிப்ஸ்: நீங்களும் அழகாகலாம்!

Published On:

| By christopher

Skincare Tips for Men

பெண்களின் அழகை மேம்படுத்தவே பல ஆலோசனைகள் அணிவகுக்கும் நிலையில், ஆண்களின் அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்க இதோ சில டிப்ஸ்… Skincare Tips for Men

ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடையும். இதைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்

சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ளலாம். இது உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை, கால்களை பாதுகாக்க முடியும்.

முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம். Skincare Tips for Men

வெயில் காலங்களில் இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது. Skincare Tips for Men

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share