கோடை கால விடுமுறை கொண்டாட்டம்! Shin Chan Our Dinosaur Diary ReviewReview
’ஷின்.. சான்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க..’ என்று குரல் உயர்த்திக் கத்துகிற மிஷேவையும், மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டவாறே மகனை அதட்டிக் கண்டிக்கிற ஹிரோஷியையும், கைக்குழந்தையான ஹிமாவாரியையும், இவர்கள் மூவரை மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்த அத்தனை பேரையும் ‘லெப்ட் ஹேண்ட்’டில் டீல் செய்கிற ஷின் சானையும் அறிந்த ரசிகர்கள் கணிசம். Shin Chan Our Dinosaur Diary Review
ஜப்பானிய காமிக்ஸ், அனிமேஷன் வீடியோக்கள், திரைப்படங்கள் வழியே ஷின் சானை அறிந்தவர்கள் குறைவென்றபோதும், குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளில் தமிழ் ‘டப்பிங்’ பதிப்பு கண்டு ரசித்து ரசிகர்கள் ஆனவர்களே அதிகம். அவர்களைக் கவர்கிற வகையில், இப்போது முழுநீள அனிமேஷன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. Shin Chan Our Dinosaur Diary Review
ஷின் சான் அண்ட் கோவின் அள்ள அள்ளக் குறையாத ‘அட்ராசிட்டி’யை பெரிய திரையில் காட்டுகிறது ‘ஷின் சான்: அவர் டைனோசர் டயரி’ (Shin Chan: Our Dinosaur Diary) திரைப்படம். மோரல் எழுத்தாக்கத்தில், ஷினோபு சசாகி இயக்கியிருக்கிற இத்திரைப்படம் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது? Shin Chan Our Dinosaur Diary Review

பெரிய திரைக்கான ‘கதை’! Shin Chan Our Dinosaur Diary Review
தன்னைச் சார்ந்த பிரச்சனை ஒன்றை ஏதேனும் சாகசம் செய்து தீர்ப்பதுதான் பெரும்பாலான அனிமேஷன் நாயகர்களின் பணியாக இருக்கும். அதில் நிறையவே அபத்தங்களைக் கலந்ததாக இருக்கும் ஷின் சானின் செயல்பாடுகள். இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதையையே கொண்டிருக்கிறது. Shin Chan Our Dinosaur Diary Review
ஒரு நபர் டைனோசர் குட்டி ஒன்றைக் கடத்திச் செல்கிறார். பரந்து விரிந்த நிலப்பரப்பொன்றில் இது நிகழ்கிறது. அங்கு பல டைனோசர்கள் இருக்கின்றன. ஒரு ஆராய்ச்சிக் கூடம் இருக்கிறது. பயங்கர கட்டுப்பாடான காவல் கண்காணிப்பை மீறிச் செல்லும் அந்த நபரை ஒரு படையே துரத்துகிறது. அப்போது நிகழும் களேபரத்தில் அந்த டைனோசர் குட்டி ஒரு ஆற்றில் விழுகிறது. அந்த நபர் அதனைத் தவறவிட்டுச் செல்கிறார்.
அந்த டைனோசர் குட்டி ஒரு பூங்காவின் அருகே உள்ள பாலத்தில் மறைந்திருக்கிறது. எப்போதும் அங்கு வந்து விளையாடும் ஷின் சானின் நாய் ஷிரோ அதனைக் காண்கிறது. தனக்கான உணவை அதற்கு வழங்குகிறது. ஒருநாள் ஷின் சான் தனது நண்பர் குழாமுடன் அந்த இடத்திற்கு விளையாடச் செல்கிறார். அப்போதுதான் ஷிரோ உடன் நட்பு பாராட்டும் அந்த டைனோசர் குட்டியை ஷின் சானும் அவரது நண்பர்களும் காண்கின்றனர்.
உடனே, அதனைத் தாங்களே வளர்ப்பது என்று முடிவு செய்கின்றனர். ஆனால், அதனை யார் வீட்டுக்குச் செல்வது என்ற பேச்சு வந்தவுடன், ‘நான் இல்லை.. நீ இல்லை..’ என்று பின்வாங்குகின்றனர். உடனே, ஷின் சான் அதனைத் தன் வீட்டுக்குக் கொண்டு செல்கிறார். ஷிரோ உடன் இணைந்து அந்த டைனோசர் குட்டியையும் பராமரிப்பதாகப் பெற்றோரிடம் சவால் விடுகிறார். Shin Chan Our Dinosaur Diary Review
வழக்கம்போல, அவர் தூக்கி வந்தாலும் தாயும் தந்தையுமே அதனைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். அந்த டைனோசர் குட்டிக்கு ஷின்சான் அண்ட் கோ ‘நானா’ என்று பெயர் வைக்கிறது. ஒருநாள் அந்த நானாவை கடத்திச் செல்ல முயற்சிக்கிறார் பில்லி எனும் நபர். அவரைப் பார்த்தவுடன் டைனோசர் குட்டி தாவிச் சென்று நட்பு பாராட்டுகிறது.
இந்த இடத்தில்தான், ‘டைனோசர்கள்’ வாழ்கிற தீம் பார்க்கை உருவாக்கிய மேஜிக் நிபுணர் வாபில் ஓடரோகேவின் கதை விரிகிறது. மக்களை ஆச்சர்யப்படுத்த வேண்டுமென்று பல முயற்சிகள் செய்யும் அவர், ஒருகட்டத்தில் ‘டைனோசர்களை’ மீண்டும் இந்த பூமியில் உருவாக்கியதாகப் பொய்க்கதை ஒன்றைப் புனைகிறார். ரோபோக்களை கொண்டு டைனோசர் காலத்தில் வாழ்ந்த விலங்குகளை உருவாக்கியதாக நாடகமாடுகிறார்.

ஆனால், அவரது மகன் பில்லியோ உண்மையாகவே ஒரு டைனோசர் குட்டியை உருவாக்குகிறார். உடனே, அந்த டைனோசர் குட்டி யார் வசம் இருப்பது எனும் பிரச்சனை எழும்போது, தந்தையை ஏமாற்றிவிட்டு வெளியேறுகிறார் மகன். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு, இப்போது ஷின் சான் வீட்டில் இருக்கிறது நானா எனும் அந்த டைனோசர் குட்டி. ஓடரோகேவுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் என்ன செய்தார்? பில்லி என்ன ஆனார்? இறுதியில் நானா என்ன ஆனது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
வழக்கமாக, ‘ஷின் சான் வீடியோக்கள்’ அனைத்தும் சின்ன கருவை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற ‘விஷுவல்களை’ காட்டும் வகையில் இருக்கும். ஆனால், இப்படமோ பிரமாண்டமானதொரு கதைக்கருவை வைத்துக்கொண்டு திரையில் வித்தை காட்டியிருக்கிறது. மோரல் எழுத்தாக்கத்தில் அந்த கற்பனை அபாரம். ஆனால், ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பக் காண்பது போன்ற உணர்வைத் தருகிறது.
டைனோசர்கள் மாறி மாறி வந்து கதையின் பிரதான மாந்தர்களை ‘அட்டாக்’ செய்கிற இடங்கள். அதனைப் பொறுத்துக்கொண்டால் ‘ஷின் சான்: அவர் டைனோசர் டயரி’ பிடித்துப் போகும். உண்மையைச் சொன்னால், மூன்று முதல் பத்து வயது குழந்தைகள் மட்டுமே ஷின் சானின் ‘அட்ராசிட்டி’க்காக இந்த கொடுமையைப் பொறுத்துக் கொள்ளும். அவர்களை அழைத்துச் செல்கிற பெற்றோரும் உற்றாரும் தியேட்டரில் நெளியத்தான் வேண்டியிருக்கும்.
அந்த ஒரு ‘மைனஸை’ பொருட்படுத்தாவிட்டால், தியேட்டரில் சிரிக்கிற தருணங்களை வாரியிறைக்கும் இப்படம். அதுவும் தமிழ் டப்பிங் பதிப்பில் ஏற்கனவே நாம் பார்த்துப் பழகிய குரல்களே இடம்பெற்றிருக்கின்றன. Shin Chan Our Dinosaur Diary Review
ஷின் சான் டப்பிங் பதிப்புகளை நாம் எப்படி ரசித்து வருகிறோமோ, அதை விட ஒரு படி மேலாகவே இதில் ‘டப்பிங்’ குழுவினரின் உழைப்பு இருக்கிறது. அந்த ஒரு காரணமே, இதனைக் காண்பதற்கான யுஎஸ்பி. Shin Chan Our Dinosaur Diary Review

டப்பிங்கை விரும்பாதவர்கள் ஒரிஜினல் ‘ஜப்பானிய’ பதிப்பைக் கண்டு ரசிக்கலாம். ஷினோபு சசாகி இயக்கிய இப்படத்தில் டோஷியுகி அரகவா ஹயாடோ மட்சுவோ, அகிஃபியூமி தடா ஆகியோரின் இசையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
டைனோசருடன் மனைவி மிஷேவை ஒப்பிட்டு ஹிரோஷி பேசுகிற இடங்கள் கொஞ்சம் வயது முதிர்ந்தோரையும் ஈர்க்கும். இது போல, அனைத்து தரப்பினரையும் கவரச் சில முயற்சிகளைச் செய்திருக்கிறது ‘ஷின் சான்: அவர் டைனோசர் டயரி’.‘வெளியே வெயில் மண்டைய பொழக்குது, கொஞ்சம் குளுகுளு ஏசியில பொழுதுபோக்கா ஒரு படம் பார்ப்போமே’ என்பவர்களை ஈர்க்கவல்லது இப்படம்.
இதனைப் பார்க்கையில் குழந்தைகளும் இருக்கையை விட்டு எழமாட்டார்கள் என்பது நல்ல விஷயம். என்ன, அவர்களது நொறுக்குத்தீனிகளுக்குத்தான் பர்ஸை கொஞ்சம் கனமாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில், கோடை கால விடுமுறைக்கு ஏற்ற கொண்டாட்டத்தை தரவல்லது இப்படைப்பு..!