மீனாட்சி அம்மன் கோவிலில் விஷால், ஐஸ்வர்யா லட்சுமி தரிசனம்!

Published On:

| By Selvam

vishal aishwarya lakshmi in madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த வாரம் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இந்தநிலையில், நடிகர் விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இன்று (மே 18) தனித்தனியாக மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். vishal aishwarya lakshmi in madurai

 vishal aishwarya lakshmi in madurai

நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன். மதுரை வந்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லாமல் எப்படி இருக்க முடியும்? கோவிலுக்கு போகாமல் வந்தால் எங்க அம்மா என்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டார்.

அம்மா கொடுத்த புடவையை அம்மனுக்கு கொடுத்து வழிபாடு செய்தேன். கோவிலுக்கு வரும்போது நன்றாக உழைக்க வேண்டும், சமுதாயத்திற்கு நல்லது பண்ண வேண்டும் என்ற வைப்ரேஷன் கிடைக்கிறது” என்றார். vishal aishwarya lakshmi in madurai

 vishal aishwarya lakshmi in madurai

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “ஒவ்வொரு படமும் தொடங்குவதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவேன். மே 21-ஆம் தேதியில் இருந்து ஒரு புதிய படத்தில் நடிக்க போகிறேன்.

அதற்காக வழிபாடு செய்வதற்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தேன். மதுரையையும் மீனாட்சி அம்மனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கு வந்துவிட்டு திரும்பி செல்லவே மனம் வராது” என்று தெரிவித்தார். vishal aishwarya lakshmi in madurai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share