Retro Movie Hits Rs 235 Crore
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை 2D எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு ரெட்ரோ வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரெட்ரோ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. Retro Movie Hits Rs 235 Crore
முதல் நாள் மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களைக் கடந்த நிலையில், தற்போது ரெட்ரோ திரைப்படமானது ரூ.235 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனால் படக்குழு மற்றும் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் வலைதள பதிவில், இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


