இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர்கிட்ட ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போட சொல்லிட்டு நண்பன் கூட பேசிக்கிட்டு இருந்தேன்.
“மச்சான்… ரிடயர்மென்ட்ல நம்ம அண்ணாமலை அண்ணன் மாதிரி வாழனும்னு சொன்னான்”
“ஏன்டா இப்படி சொல்றன்னு” கேட்டேன்.
“பாஜக மாநில தலைவர் பொறுப்பு விடுவிக்கப்பட்டதுல இருந்து, மனுஷன் ஆடு, மாடு, விவசாயம்னு நிம்மதியா இருக்கேன்னு பேட்டி கொடுத்துருக்காருன்னு” சொன்னான்.
“ஆமா, ஆமா… நல்ல ஐடியான்னு” அவன்கிட்ட சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes
ச ப் பா ணி
சந்தானம்: எனக்கும் ஜி.வி பிரகாஷ்க்கும் தான் போட்டியே..
மாசம் ஒரு வெள்ளிக்கிழமைல படத்தை ரிலீஸ் செய்வதில்

சரவணன். 𝓜
இப்பல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது..
~ உங்க பையனுக்கா?
எதே பையனுக்கா.. எனக்குய்யா.. update kumaru memes jokes

குருநாதா
சன் டே கூட எனக்கு வேலை இருக்கு தோழி
என்ன வேலை?
உங்கள மனசுல சுமக்குற வேலை update kumaru memes jokes

mohanram.ko
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார் !- நயினார் நாகேந்திரன் அடிக்கடி ஞாபகப்படுத்துங்க, அப்ப தான் மறக்காம இருக்கும்

சரவணன். 𝓜
புதுசா காதலி கிடைச்சாலும் பழைய காதலியை மறக்க கஷ்டமா இருக்கும்.. அப்படித்தான் இருக்கு, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தரும் தொண்டர்கள் நிலை…
Mannar & company™🕗
கோடைக்காலத்தில் மழை பெய்றதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையில் கறி விருந்து கிடைத்த மாதிரிதான்!
கோடைமழை

Sasikumar J
அதுல பாருங்க தெரிஞ்ச கடையில கறி வாங்குறதுல்ல ஒரே ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா எத்தனை விசில் வைக்கணும்னு அவரே சொல்லிடுவாரு…!
குருநாதா
சின்ன வயசுல பால் ஐஸ் வண்டினு நெனச்சேன் போகப்போகத்தான் தெரிஞ்சது அது
POL’ICE வண்டினு

பரமசிவம் ராமசாமி
ஞாயிறு மதியம் மனைவி
“ஏங்க ப்ரீயாத்தானே இருக்கீங்க” என்றால்..
அதன் விளக்கம். .
“வெட்டியா மொபைல் நோண்டிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா, எனக்கு கூட மாட ஒத்தாசை பண்ணுங்கனு” அர்த்தம்!!!