செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கடந்த 30ஆம் தேதி வேப்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று (ஏப்ரல் 7) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

அப்போது செங்கோட்டையனின் புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞரிடம் அளித்த வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது என்றும் அதிமுக தரப்பில் புகார் எழுப்பப்பட்டது. இதையடுத்து வேப்புமனு மீதான பரிசீலினை நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டது. இன்று மாலை 5 மணிக்குள் செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தீவிர பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை செங்கோட்டையனின் வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோபி தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த எட்டு முறை போட்டியிட்டு வெற்றி அடைந்த செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பிறகு கோபியில் ஒன்பதாவது முறையாக களம் காண்கின்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share