விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும் – செல்வப்பெருந்தகை

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

உழைக்கின்ற கட்சிகளை குறை சொல்வதை விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்செல்வப் பெருந்தகை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று பாண்டிச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, “பெயரளவுக்குத்தான் திமுக – காங்கிரஸ் இரு தரப்பும் கூட்டணி வைத்துள்ளன” என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். பொட்டியைத் திறக்கட்டும், மக்கள் என்ன முடிவு சொல்கிறார்கள் என்று பாருங்கள். மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரு கட்சி, எப்போதும் குறை குறை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

ADVERTISEMENT

24 மணி நேரமும் முதலமைச்சர் உழைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்கள் உட்பட அனைத்து தோழமைக் கட்சிகளும் ‘உழைப்பு உழைப்பு’ என்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து, நல்லது கெட்டது என அனைத்திலும் பங்கேற்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆர். மக்களுடைய பிரச்சினைகளான கொரோனா, வெள்ளம், வறட்சி போன்ற எந்த நெருக்கடியிலும் மக்களுக்காக எந்த உழைப்பையும் போடாமல், உழைக்கின்ற கட்சிகளை குறை சொல்வதை விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது அட்வைஸ்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share