விமர்சனம் : டிடி நெக்ஸ்ட் லெவல்!

Published On:

| By uthay Padagalingam

DD Next level Movie Review

சிரிக்க வைப்பதில் எந்த ‘லெவல்’? DD Next level Movie Review

ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் அல்லது படங்களின் அடுத்த பாகமாக உருவாவது ரசிகர்களின் உடனடி கவன ஈர்ப்புக்கு எளிய வழி. ஆனால், அதனைத் தக்க வைத்து மீண்டும் ஒரு வெற்றியைப் பெற தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். ’டிடி ரிட்டர்ன்ஸ்’ தந்த நடிகர் சந்தானம் – இயக்குனர் பிரேம் ஆனந்த் கூட்டணியில், ‘தில்லுக்கு துட்டு’ வகையறா காமெடி ஹாரர் சினிமாவாக உருவாகியிருக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. நடிகர் ஆர்யா தயாரித்திருக்கும் இப்படமும் அதே ‘லெவலில்’ ரசிகர்களைச் சிரிக்க வைத்திருக்கிறதா? DD Next level Movie Review

DD Next level Movie Review

கப்பல் டூ தீவு பங்களா..! DD Next level Movie Review

ஒரு பாழடைந்த தியேட்டர். அங்கு ஓடுகிற ‘ஹிட்ச்காக் இருதயராஜ்’ படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொள்ளுமாறு ஒரு விமர்சகருக்கு (பிரசாந்த்) அழைப்பு விடுக்கப்படுகிறது. அவரும் அந்த தியேட்டருக்கு செல்கிறார். ‘தனியாவா வந்திருக்கீங்க, குடும்பத்தோட வரலை’ என்று கேட்கும் நிர்வாகி ஒருவர் (கதிர்), அவரை தியேட்டருக்குள் அழைத்துச் செல்கிறார். ஆனால், உள்ளே பார்வையாளர்கள் எவருமில்லை. அதனைக் கண்டு அவர் திகைக்கிறார். DD Next level Movie Review

‘இது உங்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் ஷோ’ என்று அவரை இருக்கையில் அமர்த்துகிறார் அந்த நபர். அவர் சென்றபிறகு படம் ஓடத் தொடங்குகிறது. சில நிமிடங்களிலேயே, ’திரையில் தெரிவது உண்மையான திகில்’ என்று அந்த விமர்சகர் உணர்கிறார். அதற்குள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது இருதயராஜின் (செல்வராகவன்) ஆவி.

தான் இயக்கித் தயாரித்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த விமர்சகர்களால் அது தோல்வியுற்றதாகக் கருதும் இருதயராஜ், தேடித் தேடி விமர்சகர்களைக் கண்டறிந்து தனது தியேட்டருக்கு வரவழைத்துக் கொலை செய்கிறார். அந்த உண்மை தெரிந்ததும், ஒரு கும்பல் அவரையும் தியேட்டர் நிர்வாகியையும் கொல்கிறது. DD Next level Movie Review

இறந்தபிறகு ஆவியாக மாறி, மீண்டும் சினிமா விமர்சகர்களை இருவரும் வேட்டையடுகின்றனர்.

அந்த வரிசையில் இடம்பெறுகிற ஒருவர்தான் கிருஷ்ணா (சந்தானம்). சமூகவலைதளங்களில் ‘கிஸா 47’ என்ற பெயரில் அவர் பிரபலம்.

ஆட்டோ ஓட்டுகிற தந்தை பாஸ்கர் (நிழல்கள் ரவி), ஹவுஸ்வொஃய்ப் ஆன தாய் தேவகி (கஸ்தூரி), வீட்டில் இருக்கிற தங்கை தேவி (யாஷிகா ஆனந்த்) ஆகியோரு கிருஷ்ணா எளியதொரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்.

அவரும் ஒரு பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வருகின்றனர். அப்பெண்ணின் பெயர் ஹர்ஷினி (கீதிகா திவாரி). DD Next level Movie Review

ஒருநாள் ’இருதயராஜ் அண்ட் கோ’ அனுப்பிய ’ஸ்பெஷல் ஷோ’ அழைப்பிதம் கிருஷ்ணாவின் வீட்டிற்கு வருகிறது. அந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்த ஹர்ஷினி, அதனைக் கையிலெடுக்கிறார்.

உடனே, தனது குடும்பத்தினரையும் ஹர்ஷினியையும் ‘டைவர்ட்’ செய்து வேறு பேச்சுகளை பேசுகிறார் கிருஷ்ணா. குறிப்பிட்ட தியேட்டருக்கு தனியாகச் செல்கிறார்.

அந்த இடமே வினோதமாகத் தெரிகிறது அவருக்கு. உடனே ‘யூடர்ன்’ இட்டு வீடு திரும்புகிறார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அனைவரையும் அழைத்துக்கொண்டு வர்ஷினி ஒரு ஸ்பெஷல் ஷோ பார்க்கச் சென்றதாகத் தகவல் சொல்கிறார் பக்கத்துவீட்டுக்காரர். DD Next level Movie Review

அடித்து பிடித்து அந்த தியேட்டருக்கு மீண்டும் பறக்கிறார் கிருஷ்ணா. அங்கு அவர்கள் யாருமே இல்லை. இருதயராஜின் ஆவி மட்டுமே இருக்கிறது. அந்த தியேட்டரில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. DD Next level Movie Review

’அந்த ஸ்கீரின்ல ஓடுற படத்துலதான் உன் குடும்பம் சிக்கியிருக்குது. நீயும் அங்க போ. போய் முடிஞ்சா உன்னோட உயிரை காப்பாத்திக்க’ என்கிறது இருதயராஜ் ஆவி.

அதாகப்பட்டது, அந்த திரைப்படம் முடியும்போது கிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் உயிரோடு இருந்தால் திரையில் இருந்து வெளியே வருவது சாத்தியம். அது நிகழவிடாமல் ஏராளமான தடைகள், பிரச்சனைகள் நிகழ்கின்றன. அந்த திருப்பங்களை கிருஷ்ணா சாதுர்யமாக எதிர்கொண்டாரா என்று சொல்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மீதி.

இந்தக் கதையானது ’பேய்’ பீதியூட்டும் தியேட்டரில் இருந்து ஒரு கப்பலுக்குத் தாவுகிறது; அங்கிருந்து தனித்தீவில் உள்ள ஒரு பங்களாவுக்கு மாறுகிறது. இப்படி இதன் உள்ளடக்கம் அனைத்துவிதமான லாஜிக் மீறல்களுக்கும் இடமளிக்கிற ஒரு ‘வழக்கமான’ கமர்ஷியல் திரைப்படம் போன்றே தோற்றமளிக்கிறது.

பொதுவாக, எல்லா திரைப்படங்களிலும் நாயகனும் ஒரு நண்பர் திரிவது ‘கிளிஷே’வான விஷயம். இதிலும் அப்படித்தான் ‘வீண் பேச்சு’ பாபு (மொட்டை ராஜேந்திரன்) எனும் பாத்திரம் இருக்கிறது. DD Next level Movie Review

மொத்தக் கதையும் திரைப்படங்கள் மற்றும் அவற்றின் விமர்சனம் தொடர்பான யூடியூப், சமூகவலைதள பிரபலங்கள் சிலரைத் தாறுமாறாகக் கிண்டலடித்திருக்கிறது. அதே அளவுக்கு தமிழ் திரையுலகின் சில நடைமுறைகளையும் விளாசியிருக்கிறது.

DD Next level Movie Review

உள்ளடக்கத்தில் ’திருப்தி’?!

படத்தில் ’ஜென்ஸீ’ கிட்ஸ் போல தோற்றம் தருகிறார் சந்தானம். அந்த ‘ட்ரான்ஸ்பர்மேஷன்’ சிலருக்கு அலர்ஜி தரலாம். அதையும் மீறி, சீரியசான முகத்துடன் தோன்றி, ‘இவனே.. இவனே..’ என்றவாறே நம்மைச் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

நாயகி கீர்த்திகா திவாரிக்கு இதில் பெரிதாக வேலைகள் தரப்படவில்லை. ‘டூயட்’ ஆடக் கூடத் திரைக்கதையில் இடைவெளி தரப்படவில்லை.

இப்படத்தில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா, ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன். கணேஷ்கர், டப்பிங் கலைஞர் கதிர் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இவர்களில் லொள்ளு சபா மாறன், ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன.

ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், கௌதம் மூவரது ‘கேரியர்’ சம்பந்தப்பட்ட முக்கியமான அம்சங்களை வைத்துக் கிண்டலடித்திருப்பது கொஞ்சம் ‘ஓவர்’ தான். ஆனாலும், தியேட்டரில் அவற்றை ரசிகர்கள் ரசிக்கின்றனர்.

யாஷிகாவின் கவர்ச்சி அவதாரம் ‘ஓவர்டோஸ்’ ஆனால் சென்சாரில் மாட்டிக்கொள்வோம் என்று ‘உஷாராக’ இருந்திருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

இவர்களை மீறி இப்படத்தில் ‘டாப் டக்கர் பெர்பார்மன்ஸ்’ தந்திருப்பவர் நிழல்கள் ரவி. ’அண்ணாமலை’யில் வருவது போலவே ‘ஹிஹெஹிஹே’ சிரிப்புடன் காமெடியில் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார். என்ன, அவரது ‘கக்கூஸ் காமெடி’தான் கொஞ்சமாய் முகம் சுளிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, கலை இயக்குனர் ஏ.ஆர். மோகன், படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பணி கூட்டணி, ‘இது ஒரு வழக்கமான ஹாரர் காமெடி படம்’ என்கிற எண்ணத்தை உடைத்தெறிந்து கொஞ்சம் ‘ப்ரெஷ்’ஷான திரையனுபவத்தைத் தருகிறது.

DD Next level Movie Review

டிஐ, விஎஃப்எக்ஸ் பணிகளின் தரம் சிறப்பாக இருப்பதற்கு ஏற்ப, ப்ரேம்களின் உள்ளடக்கத்தை ‘ரிச்’சாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

அவரோடு இணைந்து எழுத்தாக்கம் செய்திருக்கின்றனர் முருகன் மற்றும் சேது. இந்த கூட்டணி, சில காட்சிகளை எழுதிவிட்டு அவற்றில் நகைச்சுவையைச் சேர்த்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.

அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாகத் திருப்தி தருகிற வகையில் இதன் திரைக்கதை வடிவத்தை அமைக்கவில்லை.

இடைவிடாமல் சிரிக்க வைத்து, ஆங்காங்கே சண்டைக்காட்சிகளை வைத்து, சிறிதாய் சில திருப்பங்களைப் புகுத்தி, திடீரென்று ‘எண்ட் கார்டு’ காட்டி கும்பிடு போட்டுவிடலாம் என்றெண்ணியிருக்கிறது ‘எழுத்தாக்கம்’ செய்திருக்கும் இக்கூட்டணி. கிட்டத்தட்ட அவையனைத்தும் சரியாகத் திரையில் ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறது.

சர்வ நிச்சயமாக, இப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ போன்று அமையவில்லை. அதேநேரத்தில், காசு கொடுத்து தியேட்டருக்கு வருகிறவர்களை ஏமாற்றவும் இல்லை.

’மனசு விட்டு சிரிக்கணும். கொஞ்சம் புதுசா கதை சொல்ற படமா இருக்கணும்’ என்பது போன்ற எதிர்பார்ப்புகளைத் தாண்டி, ‘சந்தானம் படம் பார்க்கணும்’ என்பவர்களுக்கு ஒரு ‘வித்தியாசமான அனுபவமாக’ இந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ இருக்கும்.

வீடியோகேம் பாணியில் திரைக்கதை மற்றும் உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படம், ‘என்னப்பா வழக்கமான பேய் படமா இது இல்லை’ என்பவர்களுக்கு நிறையவே போரடிக்கலாம். மற்றவர்களுக்கு இது ‘சம்மர் டைம்பாஸ்’! DD Next level Movie Review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share