இன்னைக்கு அக்கா பையன் ஊர்ல இருந்து கால் பண்ணியிருந்தான்.
“மாமா… ஸ்கூல் ஜூன் 2 கண்டிப்பா திறந்துருவாங்கலான்னு” கேட்டான்.
“ஏன்டா திடீர்னு இப்படி கேட்குற?”
“இல்ல… கொஞ்ச நாள் வெயில் நல்லா கொளுத்துச்சு. சரி, ஜூன் மாசத்துல ஒரு வாரம் லீவ் விடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்ப மழை பெய்யுதேன்னு” சொன்னான்.
“டேய்… உனக்கு மழை பெஞ்சாலும் லீவு தான். வெயில் அடிச்சாலும் லீவு தான்னு” சொன்னேன்.
“தேங்ஸ் மாமான்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
ரிசல்ட் வரும் வரைக்கும் வீதியில் விளையாடின பசங்க எல்லாம்..அதுக்குப்பின் பார்த்தால் மார்க் எவ்வளவுனு கேட்போம்னு ஒருத்தனும் வீதிக்கே விளையாட வருவதில்லை

கடைநிலை ஊழியன்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், மறுநாள் பள்ளிக்கு செல்லும் மாணவனின் மனநிலையே !!

செங்காந்தள்
அன்று :
வாகனங்களை இயக்கும் போது மொபைல் போனில் பேசாதீர்கள்.
இன்று :
மொபைல் போனில் பேசும் போது வாகனங்களை இயக்காதீர்கள்.

சாவி
No smile please
நீங்க எதிர்பார்த்த திருப்பம் இன்று வந்து சேரும்….இன்றைய ராசி பலன்.
நானே கழுத்து வலின்னு திரும்ப முடியாம அவஸ்தையில இருக்கேன், இவனுங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க..

Mannar & company™🕗
கிடுக்கிப்பிடி கேள்வியா கேட்டுகிட்டு இருக்காங்க மாமா.
யாரு ED காரங்களா Dawn pictures ஆகாஷ் கிட்டேயா மாப்ள?!
நீங்க வேற மாமா என்கிட்ட உங்க பொண்ணுதான்.. அதான் என் பொண்டாட்டி… எங்கே போனே? ஏன் போனே? எதுக்கு போனேன்னு!?

ArulrajArun
“அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” – எடப்பாடி பழனிசாமி!
எது தேர்தல் வரதுக்கு ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியா

iQKUBAL
நெஞ்சு எரிச்சலுக்கு ஜெலுசில் குடிக்கலாம்னு பாத்தா, குடிச்சதுக்கு அப்றம் தான் ரொம்ப எரியுது..

குருநாதா
my father to me:உனக்கு என்ன தெரியும்னு பேசுற
me to my son:எல்லாம் தெரிஞ்சிருக்குனு திமிர்ல பேசுற update kumaru memes jokes