Mission Impossible The Final Reckoning Review
முடிச்சு விட்டீங்க போங்க..!
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது போல, சில ‘ஆக்ஷன் நாயகர்’ பாத்திரங்களைத் தந்திருக்கிறது ஹாலிவுட். அதிலொன்று, ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் வரும் டாம் க்ரூஸ். பேரழகன் என்ற பெயரை ரொமான்ஸ், ட்ராமா மற்றும் இதர வகை படங்களில் பெற்ற அவரை ‘டாப் கன்’ போன்ற சில படங்களே ‘ஆக்ஷன் நாயகனாக’க் காட்டின. ஆனால், பிரையன் டி பாமா இயக்கத்தில் வந்த ‘மிஷன் இம்பாசிபிள்’தான் அவரை உலகம் முழுக்கத் தெரிய வைத்தது. அந்த சீரிஸில் வந்த அடுத்தடுத்த படங்களின் வெற்றியும், தங்கள் மனதில் அவற்றுக்கு ரசிகர்கள் தந்த இடமும் மிகப்பெரியது.
அந்த வரிசையில் வெளியான ’மிஷன் இம்பாசிபிள்: தி டெட் ரெக்கனிங்’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது இந்த ‘பைனல் ரெக்கனிங்’.
வழக்கம்போல, உலகை ஆபத்தின் பிடியில் இருந்து காக்கிற வேலையைத்தான் ‘ஈதன் ஹண்ட்’ பாத்திரத்தின் வழியே இதிலும் செய்திருக்கிறார் டாம் க்ரூஸ். அது ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்க்கவல்லது? Mission Impossible The Final Reckoning Review
வழக்கமான கதை! Mission Impossible The Final Reckoning Review
உலகத்தைக் காக்கப் புறப்படுகிற ஒரு அமெரிக்க உளவாளியின் கதையைக் கொண்டிருக்கிறது இப்படம். அந்த வகையில், மிக வழக்கமான கதை சொல்லலையே கொண்டிருக்கிறது. Mission Impossible The Final Reckoning Review
’எண்டைட்டி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு உலகத்திலுள்ள பெரிய நாடுகளின் அணு ஆயுத சோதனை பயன்பாட்டைத் தன் வசமாக்கி வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே அதில் பாக்கி.
’இன்னும் மூன்று நாட்களில் அந்நாடுகளிலுள்ள அணு ஆயுதங்களையும் எண்டைட்டி தன்வசமாக்கும்’ என்ற சூழலில், அதன் தொடர்ச்சியாக ‘அணு ஆயுதப் போர்’ நாடுகளுக்கிடையே நிகழும் என்ற நிலையில், அமெரிக்க அரசாங்கம் ஐஎம்எஃப் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஈதன் ஹண்ட்டை (டாம் க்ரூஸ்) நாடுகிறது. எண்டைட்டியின் செயல்பாட்டை முடக்க ஈதன் ஹண்ட்டால் மட்டுமே முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.

’மந்திரவாதியின் உயிர் ஏழு மலை, ஏழு கடலுக்கு அப்பால் இருக்கிற ஒரு கிளியின் உயிரில் அடங்கியிருக்கிறது’ என்று சொல்லும் ‘பாதாள பைரவி’ போல, எண்டைட்டியை கட்டுபடுத்துகிற சில சாதனங்கள் வடதுருவத்தில் இருக்கிற கடலின் ஆழத்தில் விபத்துக்குள்ளான ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கிறது.
அதனைக் கட்டுப்படுத்துகிற இன்னொரு சாதனம் ஈதன் ஹண்ட்டின் எதிரியான கேப்ரியேல் (எசாய் மொரால்ஸ்) வசம் இருக்கிறது. இரண்டையும் ஒன்றிணைக்கிற சாவி ஹண்டிடம் உள்ளது. Mission Impossible The Final Reckoning Review
ஐஎம்எஃப் பிடியில் சிக்காமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கிறார் கேப்ரியேல். உலகையே கட்டுப்படுத்த முயல்கிற எண்டைட்டி தன் செயல்பாடுகளுக்கேற்ற இடமாக ஒரு ‘சர்வர்’ தளமொன்றை நாடுகிறது. அது காங்கோ நாட்டில் இருக்கிறது.
ஆக, மூன்று நாட்களுக்குள் வட துருவத்தில் புதைந்து கிடக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்து, அதனை காங்கோவுக்கு எடுத்து வந்து, அங்கு தன்னைத் தேடி வருகிற கேப்ரியேலின் வசமிருக்கிற இன்னொரு சாதனத்தைப் பிடுங்கி, அனைத்தையும் ஒன்றிணைத்து ‘எண்டைட்டி’யின் கொட்டத்தை நாயகன் ஈதன் ஹண்ட் அடக்கினாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. Mission Impossible The Final Reckoning Review
முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது ‘மிஷன் இம்பாசிபிள்’ ரசிகர்களுக்கு நன்கு தெரிந்ததே. Mission Impossible The Final Reckoning Review
ஆனால், அந்த முடிவை நோக்கி நாம் பயணிப்பதற்குள் ‘போதும்.. போதும்..’ என்றாக்கிவிடுகிறது ‘மிஷன் இம்பாசிபிள்: தி பைனல் ரெக்கனிங்’ தரும் திரையனுபவம்.

முடிஞ்சு போச்சு..! Mission Impossible The Final Reckoning Review
டாம் க்ரூஸ், ஹெய்லி அட்வால், விங் ராம்ஸ், சிமோன் பெக், எசாய் மொரால்ஸ் உட்படப் பெரும் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. இதில் சிலர் ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ் முழுக்க வந்தவர்கள்.
இது போக, இதர பாகங்களின் காட்சிகளும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ப்ரூஸ் ஜெல்லர் என்பவர் உருவாக்கிய ஒரு டிவி தொடரின் அடிப்படையிலேயே ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் முதல் பாகம் உருவானது. அதன்பிறகு ஈதன் ஹண்ட் பாத்திரத்தைக் கொண்டு ஆறு சாகசக் கதைகள் உருவாக்கப்பட்டன. அந்த ஆறாவது கதையின் இரண்டாம் பாகமே இப்படம்.
அது மட்டுமல்லாமல், இந்த சீரிஸ் படங்களில் இதுவே கடைசி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘முடிஞ்சு போச்சு’ என்று ரசிகர்கள் வருந்துகிற வகையில் இப்படம் இல்லாதது மிக வருத்தம் தரும் விஷயம்.
இதன் எழுத்தாக்கத்தை இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்கோரி உடன் இணைந்து கையாண்டிருக்கிறார் எரிக் ஜெண்ட்ரஸன்.
இதுவரை வந்த அனைத்து ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் நாயகன் மேற்கொண்ட சாகசங்களை ஒரு கோட்டில் இணைத்து, அதன் வழியே இந்த கதை சொல்லலுக்கு ஒரு முடிவைத் தந்து, இந்த சீரிஸை ‘கிளாசிக்’ ஆக்க நினைத்திருக்கிறது இந்த கூட்டணி.

ஆனால், ’என்னப்பா இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க’ என்பதாக உள்ளது இத்திரைக்கதையின் முதல் ஐம்பது சதவிகிதப் பகுதி. அங்கேயே பல ரசிகர்கள் தேங்கி, இருக்கையிலேயே குறட்டைவிடுகின்றனர். அதையும் மீறி, அவர்களை எழுப்புகிற வகையில் நாயகனின் ‘ஆக்ஷன் எபிசோடுகள்’ இல்லை.
ஒளிப்பதிவாளர் ப்ரேசர் டக்கார்ட், படத்தொகுப்பாளர் எட்டி ஹாமில்டன், இசையமைப்பாளர் மேக்ஸ் அருஜ், ஆல்ஃபி காட்ப்ரே உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது. ஆனாலும், அவை திரையுடன் நாம் ஒன்றும் அளவுக்கு அமையவில்லை.
டாம் க்ரூஸ் எனும் நடிகனை ஈதன் ஹண்ட் ஆக காண்பிக்கிற ‘மிஷன் இம்பாசிபிள்’ தீம் இசை ஓரிரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்படம் திரையில் சுமார் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுகிறது.
இது போன்ற பல குறைகளைத் தாண்டி, ‘மிஷன் இம்பாசிபிள்’ முதல் பாகம் போன்றே அமைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவு மட்டுமே ஈர்க்கிறது.
’முடிச்சு விடுறா.. முடிச்சு விடுறா..’ என்பது போல, ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களின் அத்தனை கதாபாத்திரங்களையும், ஈதன் ஹண்ட் பாத்திரத்தின் அத்தனை சாகசங்களையும் ஒன்றிணைத்து, இந்த உலகத்தை அப்பாத்திரம் காப்பதாக வார்க்கப்பட்டிருக்கிறது ‘மிஷன் இம்பாசிபிள்: தி பைனல் ரெக்கனிங்’. ஆனால் அந்த வார்ப்பு ‘மொத்தமா முடிச்சு விட்டீங்க போங்க’ என்று ரசிகர்கள் கதறுகிற வகையில் திரையனுபவம் தருகிறது.
என்னே இது ‘மிஷன் இம்பாசிபிள்’ ரசிகர்களுக்கு வந்த சோதனை!
