தமிழக தலைமை செயலாளராக சாய்குமார் நியமனம்!

Published On:

| By Kavi

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது.

ADVERTISEMENT

இந்தசூழலில் தேர்தல் ஆணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.

இந்த பணியிட மாறுதல் தொடர்பாக நமது மின்னமலத்தில் நேற்று (ஏப்ரல் 7) ’கெத்தா’ வலை விரித்த இபிஎஸ்.. ’கொத்தா’நழுவிய ஐஏஎஸ் அதிகாரிகள்.. து.மு. கனவில் மிதக்கும் பாஜக ‘தலை’கள்.. அண்ணாமலையின் புது ‘அசால்ட்’ ரூட்! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில்

ADVERTISEMENT

“இப்ப 4 நாட்களுக்கு முன்னாடி டிஜிபி பொறுப்புல இருந்த வெங்கட்ராமனை மாத்திட்டு சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டாரு.. மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், மேற்கு மண்டல ஐஜி சரவண சுந்தர் எல்லாம் மாத்தப்பட்டாங்க.. இது எல்லாம் தேர்தல் கமிஷன் போட்ட ஆர்டர்.

இந்த தடாலடி டிரான்ஸ்பருக்கு எல்லாம் பின்னணி என்னான்னா, “இந்த அதிகாரி இப்படி சார்பா செயல்படுறாரு.. அப்படி ஒருதலைபட்சமா இருக்கிறாரு”ன்னு போன கம்ப்ளெயிண்ட்தான்.. இந்த பின்னணியில இருப்பதும் எடப்பாடிதானாம்..

ADVERTISEMENT

ஆனா இதே கோதாவுல சீப் செக்ரட்டரியை மாத்துங்க, ஃபைனான்ஸ் செக்ரட்டரி உதயசந்திரனை மாத்துங்கன்னு எடப்பாடி செஞ்ச முயற்சிகளை யாரும் கண்டுக்கவும் இல்லையாம்..

இதை பத்தி ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்துல விசாரிச்சப்ப,” எடப்பாடி இப்படி பேசுனாலும் சில ஆபீசர்ஸ், “நோ சார்.. எனக்கு அந்த போஸ்டிங்ல இன்ட்ரஸ்ட் இல்லைங்களே”ன்னு மறுத்திருக்காங்க..

இன்னும் சில பேர், “எங்கசார் ஹெல்த் ஒத்துழைக்கலை.. நான் எங்கே போறது”ன்னு சொல்லி இருக்காங்க.. அதே மாதிரி, “குடும்பத்துல கொஞ்சம் இஷ்யூஸ் இருக்கு சார்.”ன்னும் கூட சொல்லி இருக்காங்க” என்கின்றனர்.

ஏன்னா, “அதிகாரிகளைப் பொறுத்தவரைக்கும் மறுபடியும் திமுகதான் ஆட்சி அமைக்கும்னு நினைக்கிறாங்க.. அதனால எடப்பாடி பேசுனதுக்கு பதில் மட்டும் சொல்லி இருக்காங்க”ன்னு சொல்றாங்க.. என கூறியிருந்தோம்.

இந்நிலையில் இன்று தலைமை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழ்நாடு கேடரின் 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். 2018ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளராக இருந்தவர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், மற்றும் முதல்வரின் செயலாளர் (நிலை 1) எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share