சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்!

Published On:

| By Kavi

18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) ரத்து செய்யப்பட்டு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தமிழகப் போக்குவரத்துத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்துகள் குறையவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததை அடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) ரத்து செய்யப்படும். மேலும் வாகனம் ஓட்டி பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது என்றும் தமிழகப் போக்குவரத்துத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாடு தொக்கு!

பியூட்டி டிப்ஸ்: வெயில்படும் இடங்களில் கருமை… நீக்குவது எப்படி?

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்?

T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share