T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!

விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 2 அன்று அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. ஜூன் 29 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் பங்குபெறுகின்றன.

இந்த 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அந்த குழுவில் மீதமுள்ள 4 அணிகளுடன் லீக் சுற்று போட்டிகளில் மோதிக்கொள்ள உள்ளன.

குரூப் ஏ – இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா
குரூப் பி – நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
குரூப் சி – நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
குரூப் டி – தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள்

இதை தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகள் மீண்டும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ‘சூப்பர் 8’ ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதை தொடர்ந்து, அந்த 2 பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில், அதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள உள்ளன.

நியூ யார்க், புளோரிடா, டல்லாஸ், கயானா, பார்படாஸ், ஆன்டிகுவா, டிரினிடாட், செயின்ட் வின்சென்ட், செயின்ட் லூசியா என 9 மைதானங்களில் இந்த தொடர் நடைபெறவுள்ள நிலையில், கயானாவில் நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதிக்கொள்கின்றன.

ஜூன் 5 அன்று இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூ யார்க்கில் நடைபெறுகிறது

டி20 உலகக்கோப்பை 2024 அட்டவணை

அமெரிக்கா vs கனடா – ஜூன் 2, 06:00 AM – டல்லாஸ்

மேற்கிந்திய தீவுகள் vs பப்புவா நியூ கினியா – ஜூன் 2, 08:00 PM – கயானா

நமீபியா vs ஓமன் – ஜூன் 3, 06:00 AM – பார்படாஸ்

இலங்கை vs தென் ஆப்பிரிக்கா- ஜூன் 3, 08:00 PM – நியூ யார்க்

ஆப்கானிஸ்தான் vs உகண்டா – ஜூன் 4, 06:00 AM – கயானா

இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து – ஜூன் 4, 08:00 PM – பார்படாஸ்

நெதர்லாந்து vs நேபாள் – ஜூன் 4, 09:00 PM – டல்லாஸ்

இந்தியா vs அயர்லாந்து – ஜூன் 5, 08:00 PM – நியூ யார்க்

பப்புவா நியூ கினியா vs உகண்டா – ஜூன் 6, 05:00 AM – கயானா

ஆஸ்திரேலியா vs ஓமன் – ஜூன் 6, 06:00 AM – பார்படாஸ்

அமெரிக்கா vs பாகிஸ்தான் – ஜூன் 6, 09:00 PM – டல்லாஸ்

நமீபியா vs ஸ்காட்லாந்து – ஜூன் 7, 12:30 AM – பார்படாஸ்

கனடா vs அயர்லாந்து – ஜூன் 7, 08:00 PM – நியூ யார்க்

நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் – ஜூன் 8, 05:00 AM – கயானா

இலங்கை vs வங்கதேசம் – ஜூன் 8, 06:00 AM – டல்லாஸ்

நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா – ஜூன் 8, 08:00 PM – நியூ யார்க்

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து – ஜூன் 8, 10:30 PM – பார்படாஸ்

மேற்கிந்திய தீவுகள் vs உகாண்டா – ஜூன் 9, 06:00 AM – கயானா

இந்தியா vs பாகிஸ்தான் – ஜூன் 9, 08:00 PM – நியூ யார்க்

ஓமன் vs ஸ்காட்லாந்து – ஜூன் 9, 10:30 PM – ஆன்டிகுவா

தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் – ஜூன் 10, 08:00 PM – நியூ யார்க்

பாகிஸ்தான் vs கனடா – ஜூன் 11, 08:00 PM – நியூ யார்க்

இலங்கை vs நேபாள் – ஜூன் 12, 05:00 AM – புளோரிடா

ஆஸ்திரேலியா vs நமீபியா – ஜூன் 12, 06:00 AM – ஆன்டிகுவா

அமெரிக்கா vs இந்தியா – ஜூன் 12, 08:00 PM – நியூ யார்க்

மேற்கிந்திய தீவுகள் vs நியூசிலாந்து – ஜூன் 13, 06:00 AM – டிரினிடாட்

வங்கதேசம் vs நெதர்லாந்து – ஜூன் 13, 08:00 PM – செயின்ட் வின்சென்ட்

இங்கிலாந்து vs ஓமன் – ஜூன் 14, 12:30 AM – ஆன்டிகுவா

ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா – ஜூன் 14, 06:00 AM – டிரினிடாட்

அமெரிக்கா vs அயர்லாந்து – ஜூன் 14,08:00 PM – புளோரிடா

தென் ஆப்பிரிக்கா vs நேபாள் – ஜூன் 15, 05:00 AM – செயின்ட் வின்சென்ட்

நியூசிலாந்து vs உகாண்டா – ஜூன் 15, 06:00 AM – டிரினிடாட்

இந்தியா vs கனடா – ஜூன் 15, 08:00 PM – புளோரிடா

நமீபியா vs இங்கிலாந்து – ஜூன் 15, 10:30 PM – ஆன்டிகுவா

ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து – ஜூன் 16, 06:00 AM – செயின்ட் லூசியா

பாகிஸ்தான் vs அயர்லாந்து – ஜூன் 16, 08:00 PM – புளோரிடா

வங்கதேசம் vs நேபாள் – ஜூன் 17, 05:00 AM – செயின்ட் வின்சென்ட்

இலங்கை vs நெதர்லாந்து – ஜூன் 17, 06:00 AM – செயின்ட் லூசியா

நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா – ஜூன் 17, 08:00 PM – டிரினிடாட்

மேற்கிந்திய தீவுகள் vs ஆப்கானிஸ்தான் – ஜூன் 18, 06:00 AM – செயின்ட் லூசியா

ஜூன் 18 உடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அதை தொடர்ந்து ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை ‘சூப்பர் 8’ ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதை தொடர்ந்து, ஜூன் 27 அன்று டிரினிடாட் மற்றும் கயானா ஆகிய மைதானங்களில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

அந்த அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெரும் அணிகள், ஜூன் 29 அன்று பார்படாஸில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெல்லியில் வாட்டி வதைத்த வெயில்: திக்குமுக்காடிய பொதுமக்கள்!

கிணற்றில் விழுந்த குட்டி யானை:11 மணி நேரம்… போராடி மீட்ட வனத்துறை!

பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்க: தேர்தல் அலுவலரிடம் திமுக மனு!

அமெரிக்காவில் தெருக்கூத்து: கின்னஸ் சாதனை படைத்த சங்ககிரி ராச்குமார்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *