சைவ பிரியர்களுக்கு சிறிதளவு ஊறுகாயும், அசைவ பிரியர்களுக்கு கொஞ்சம் கருவாடு துண்டும் இருந்தால் போதும். தட்டில் உள்ள மொத்த சாதத்தையும் காலி செய்து விடுவார்கள். இந்த நிலையில் இந்த நெத்திலி கருவாடு தொக்கு என்றால் கேட்கவே வேண்டாம். அசைவ பிரியர்களின் விருப்ப உணவாக இருக்கும் இந்த தொக்கை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
என்ன தேவை?
நெத்திலி கருவாடு – 100 கிராம் (சுத்தம் செய்யவும்)
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
தக்காளி – 2 (நறுக்கவும்)
மஞ்சள்தூள், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் சிறிது எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். கறிவேப்பிலை, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிவைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் நன்கு கழுவி சுத்தம் செய்த கருவாட்டைச் சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து பக்குவமாகக் கலந்துவிடவும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 15 நிமிடங்கள் வேக விடவும். வேகும்போது அடுப்பைக் குறைந்த தீயில் வைப்பது முக்கியம். நன்கு கொதித்து வந்த பின்னர் எண்ணெய் மேலாகப் பிரிந்து வரும். இந்தப் பக்குவத்தில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் கமகமவென கருவாடு தொக்கு தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வெஜ் கோலா உருண்டை!
கிச்சன் கீர்த்தனா: புதுச்சேரி இறால் குழம்பு!
ராணுவ வீரர்கள் கயிறு இழுக்கும் போட்டி: சீனாவை வீழ்த்திய இந்தியா… வீடியோ வைரல்!