அரசு ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு அறிவித்த நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Rs 1 crore insurance for government employees
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினையும்,

விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும்.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக 10 இலட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் என அறிவித்தார்.
இதையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகளுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த மே 19ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தசூழலில் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சார் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ” அரசு ஊழியர்கள் தங்களது நடப்பு வங்கிக் கணக்கினை இப்புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு வங்கிக் கிளையில் வழங்கும் படிவத்தினை பூர்த்தி செய்து இத்துடன் பின்வரும் நகல்களையும் இணைத்து வழங்க வேண்டும்.
Pass Book, Staff ID Card Salary slip(April’25), Aadhar PAN” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Rs 1 crore insurance for government employees