மத்திய அரசு பிஎஸ்யூ வேலைவாய்ப்பு 2026: ஆர்சிஎஃப்எல் நிறுவனத்தில் 188 ட்ரெய்னி பணிகள்

Published On:

| By Santhosh Raj Saravanan

rcfl operator trainee recruitment 2026 188 posts

மத்திய அரசு பிஎஸ்யூவில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் நவரத்னா நிறுவனமான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL), 2026ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் ஆபரேட்டர் ட்ரெய்னி (Operator Trainee) பதவியில் மொத்தம் 188 காலியிடங்கள் (Vacancies) நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 27, 2026 (மாலை 5 மணி) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முழு விண்ணப்பமும் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்படும்.

ADVERTISEMENT
யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

  • பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) + ஏஓ (சிபி) ஐடிஐ
  • கெமிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ + அப்ரண்டிஸ் பயிற்சி (போட்)
  • சாண்ட்விச் டிப்ளமோ (கெமிக்கல் இன்ஜினியரிங்)

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், குறைந்தபட்சம் 55% மதிப்பெண் (ஒதுக்கீட்டினருக்கு 50%) அவசியம்.

வயது வரம்பு மற்றும் சம்பளம்

அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள், ஒதுக்கீட்டினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: பயிற்சி காலத்தில் மாதம் சுமார் ரூ.22,000, பின்னர் ரூ.22,000 – 60,000 வரை ஊதிய அளவுகோல் என வழங்கப்படும்.

இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு, டாக்குமெண்ட் சரிபார்ப்பு, ஸ்கில் டெஸ்ட், மருத்துவ பரிசோதனை மூலம் நடைபெறும்.

இந்த பணியிடங்கள் மும்பை (ட்ராம்பே) மற்றும் ராய்கட் (தால்) தொழிற்சாலைகளில் வழங்கப்பட உள்ளன. மேலும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்சிஎஃப்எல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும், தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

188 காலியிடங்களுடன் வெளியாகியுள்ள ஆர்சிஎஃப்எல் ட்ரெய்னி வேலைவாய்ப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பிஎஸ்யூ துறையில் நுழைய ஒரு முக்கிய வாய்ப்பாகும். குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலை தேடுபவர்கள், காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share