கண்ணுக்கு தெரியாமல் அதிகரிக்கும் விலைவாசி… 100 கோடி இந்தியர்களின் நிலை?

Published On:

| By Minnambalam Desk

RBI has reduced the interest rate for banks


‎கடந்த பிப்ரவரி 8, 2023 முதல் பிப்ரவரி 6, 2025 வரை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான குறுகிய கால ‘ரெப்போ’ கடன் விகிதத்தை 6.5% ஆக மாற்றாமல் வைத்திருந்தது. RBI has reduced the interest rate for banks

‎இந்த இரண்டாண்டு கால பகுதியில் (பிப்ரவரி 2023 முதல் ஜனவரி 2025 வரை) நுகர்வோர்களுக்கான விலைக் குறியீடு (Consumer Price Index) சராசரியாக ஆண்டுக்கு 5.2% அதிகரித்துள்ளது. RBI has reduced the interest rate for banks

‎நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நுகர்வோர் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் சராசரி மாற்றங்களை அளக்கும் அளவுகோலாகும்.

‎இது பொதுவாக உணவு, உடை, வீடு, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

‎இந்த குறியீட்டு மதிப்பு, நாட்டில் உள்ள பொருளாதார நிலை மற்றும் பணவீக்க அளவை (Inflation Rate) மதிப்பீடு செய்ய உதவுகிறது.

‎CPI உயர்வதன் மூலம் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதைப் (பணவீக்கம்) குறிக்கிறது.

‎இதுவே நுகர்வோர்களுக்கான உணவு விலைக் குறியீடு (Consumer Food Price Index) 7.6% ஆக அதிகரித்துள்ளது.

‎நுகர்வோர் உணவுப் பொருட்கள் விலை குறியீட்டு (CFPI) என்பது நுகர்வோர் வாங்கும் முக்கியமான உணவுப் பொருட்களின் விலைகளில் நேரும் சராசரி மாற்றங்களை அளக்கும் ஒரு குறியீட்டு மதிப்பாகும்.

‎இதில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி, முட்டை, மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கும்.


‎இந்த குறியீட்டின் மூலமாக உணவுப் பொருட்களின் விலைமாற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அரசாங்கம் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கண்காணிக்க முடிகிறது.

CFPI உயர்வது உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பைக் (உணவுப் பணவீக்கம்) குறிக்கிறது. RBI has reduced the interest rate for banks

‎அதே நேரத்தில் தற்போதைய நாட்டின் ஒட்டுமொத்த பண வீக்கத்தை அளவிட்டால் அது வெறும் 3.16% மட்டுமே.

‎ஆனால் உணவு பண வீக்கத்தில் ஏற்படும் தாக்கம் இந்தியாவில் உள்ள 100 கோடி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

‎இந்தியாவில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பணவீக்க அதிகரிப்பால் மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவு செய்கிறார்கள்.

‎இதனைக் கருத்தில் கொண்டே இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

‎வட்டி விகிதக் குறைப்பால் நுகர்வோர்கள் அதிக அளவிற்கு வங்கிகளில் கடன்களை வாங்குவதன் மூலமாக பொருளாதார சுழற்சி ஏற்படும் என்று நம்பிக்கையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

‎இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன என்பது வருங்காலத்தில் தான் தெரியவரும்.

RBI has reduced the interest rate for banks
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share