தமிழகத்தில் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பாஜக, சிபிஐ, சிபிஎம், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (மே 20) தெரிவித்துள்ளார். Minister Sivasankar clarifies household eb bill
இதுதொடர்பாக சிவசங்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்” என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார். Minister Sivasankar clarifies household eb bill
