வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக இரண்டு ஆண்டுகளாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருந்தது.
ஆனால் கடந்த 2022 மே மாதம் முதல் ஆறு முறை உயர்த்தப்பட்டது. அதன்படி 2020ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், புதிய கொள்கையின் படி 6.25 சதவீதமாக உயர்ந்தது. அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இரு மாதத்திற்கு ஒருமுறை நட்த்தப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் இன்று (ஜூன் 8) காலை நடைபெற்றது.
கூட்டத்தில், ”ரெப்போ வட்டி விகிதம் இம்முறை மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா










