ரஷ்யாவும், உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Trump Announces Immediate Russia
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இந்தநிலையில், போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 19-ஆம் தேதி இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “புதின் உடனான உரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Trump Announces Immediate Russia
பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.
பேரழிவு தரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அதன்மூலம், ரஷ்யாவில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளம் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார். Trump Announces Immediate Russia
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கான அதிகாரப்பூர்வ காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் புதினுடன் டிரம்ப் பேசியிருப்பது, ரஷ்யா – உக்ரைன் மோதலில் மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. Trump Announces Immediate Russia