லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும், ‘தலைவர் 171’ படத்தின் கதை குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘தலைவர் 171’ படத்தின் கதை குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.
அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதோடு முந்தைய லோகேஷ் படங்கள் போல இல்லாமல் இப்படத்தில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் எதுவும் இடம் பெறாது.
Aadujeevitham: பிருத்விராஜ் படம் ரசிகர்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்!
இதை லோகேஷ் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் இப்படம் டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளதாக தெரிகிறது.
இதனை நிரூபிப்பது போல படம் தொடர்பான அறிவிப்பில் டைம் மெஷினே பிரதானமாக இடம் பிடித்துள்ளது.
அதோடு கையில் விலங்கு போல வாட்ச் இடம் பெற்றுள்ளது. எனவே நிச்சயம் ஜெயில் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம் பிடிக்கும்.
லோகேஷின் வழக்கமான பார்முலாவில் இருந்து மாறுபட்ட கதை என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
படத்தின் தலைப்பு வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ் இதற்கு முன் கமலை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ படத்தில் ‘ஆரம்பிக்கலாங்களா’ என்னும் கேப்ஷனும், ‘லியோ’ படத்தில் ‘பிளடி ஸ்வீட்’ என்னும் வார்த்தையும் இடம் பெற்றிருந்தது.
அதேபோல இந்த ‘தலைவர் 171’ படத்திலும் கேப்ஷன் இடம்பெறுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விதி மீறியதா ராஜஸ்தான்? ரிக்கி பாண்டிங் கோபத்தில் கத்தியது ஏன்? : விளக்கம்!
பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு!